இந்திய மாணவர்களை அனுமதிக்காத சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசா ரத்து: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

By : Thangavelu
சீனாவில் உள்ள வூகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரையில் அழியாமல் உள்ளது. இந்த வைரஸ் முதன் முதலாக சீனாவில் தோன்றி ஒரு சில வாரங்களிலேயே உலகத்தையே ஆக்கிரமித்தது.
இந்த வைரஸ் தொற்றுக்கு பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனை அழிப்பதற்காக ஒவ்வொரு நாட்டு விஞ்ஞானிகளும் தடுப்பூசியை கண்டறிந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக தொற்று வேகமாக குறைந்து மக்கள் நிம்மதி அடைந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா வைரஸ் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் சீனா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்பியிருந்தனர். தற்போது மீண்டும் சீனாவுக்கு அழைத்து கொள்ளும்படி இந்தியா சார்பில் பல முறை கோரிக்கை வைத்தும் ஏற்கப்படவில்லை. இதனால் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களின் படிப்பை தொடர முடியாமல் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து கூட்டமைப்பு சுற்றறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சீன நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா இனிமேல் செல்லுபடியாகாது என கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பயணிகளின் விரவங்களையும் வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு தறபோதாவது புத்தி வருமா என்று தெரியவில்லை. இந்திய மாணவர்களின் கல்வியை தொடருவதற்கு விரைவில் நல்ல முடிவை சீனா அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source, Image Courtesy: Daily Thanthi
