Kathir News
Begin typing your search above and press return to search.

மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் மென்பொருள் மூலம் வேட்பாளரின் வெற்றியை மாற்ற முடியுமா? மதுரையில் இருந்து கிளம்பிய சர்ச்சை!

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் புகார்கள் தெரிவித்து வருகின்றன.

மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் மென்பொருள் மூலம் வேட்பாளரின் வெற்றியை மாற்ற முடியுமா? மதுரையில் இருந்து கிளம்பிய சர்ச்சை!
X

KarthigaBy : Karthiga

  |  13 April 2023 12:00 PM IST

மதுரையைச் சேர்ந்த என்ஜினியர் கண்ணன் என்பவர் மின்னணு வாக்கு பதிவு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்து வேட்பாளரின் வெற்றியை மாற்ற முடியும் என்று கூறுகிறார். இதனை அவர் மாதிரி எந்திரம் மூலம் செய்தும் காண்பித்தார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அவர் மாதிரி வாக்குபதிவு எந்திரத்தில் வாக்கு பதிவு செய்து அதில் எந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டுமோ அவரை வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற வைக்கிறார் .இது குறித்து என்ஜினீயர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-


மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் அதிகமாக வாக்குகளை பெற வைக்க முடியும் . இதன் மூலம் மக்களிடமிருந்து அதிக வாக்குகளை வேறொரு வேட்பாளர் பெற்று இருந்தாலும் அவர் குறைவான வாக்குகள் பெற்றதாகவே காட்டும். ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது .அந்த அளவுக்கு மென்பொருளை உருவாக்கலாம். இதை தடுக்க ஒப்புகை சீட்டு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை பிரித்து எண்ணுவதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காகவும் நான் மெஷின் தயாரித்து இருக்கிறேன். இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்போது அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிவிட்டார்கள் .இவ்வாறு அவர் கூறினார்.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News