Kathir News
Begin typing your search above and press return to search.

காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் கார் நிறுவனங்களின் புதிய திட்டம்!

பெரு நிறுவனங்களில் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக கார் நிறுவனங்கள் புதியதாக ஒரு திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் கார் நிறுவனங்களின் புதிய திட்டம்!

KarthigaBy : Karthiga

  |  13 Nov 2023 5:00 AM GMT

டெல்லி, மும்பை உட்பட பெரிய நகரங்களில் காற்று மாசு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாசுவை குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்குமாறும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. எரிசக்தி பாதுகாப்பு திருத்த சட்டம் 2022 கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.


வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக கார்பன் வெளியிட்டால் அதனை உற்பத்தி செய்த நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. இந்த சட்டம் கடந்த ஜனவரியில் அமலுக்கு வந்தது. கிலோ மீட்டருக்கு 4.7 கிராமுக்கு கார்பன் வெளியிட்டால் காருக்கு 25 ஆயிரம் அபராதமு 4.7 கிராமுக்கு மேல் இருந்தால் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.இந்த விதியின் படி பல்வேறு நிறுவனங்கள் ரூபாய் 370 கோடி வரை அபராதம் செலுத்தி இருக்கின்றன.


உற்பத்தி செய்யப்பட்ட காரின் எடையை விற்பனையான கார்களின் எண்ணிக்கை அவை கார்பன் வெளியிடும் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப இந்த அபராத தொகை கணக்கிடப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் முதல் 9 மாதங்களில் அபராதம் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் தொடங்கி விதிக்கப்பட்டு வந்துள்ளது. எனவே இந்த அபராதத்தில் இருந்து தப்பிக்கவும் மாசற்ற சுற்றுச்சூழலை உருவாக்க உதவும் வகையில் கார் நிறுவனங்கள் அவசர கதிரில் புதிய நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கார் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


SOURCE :Dinakaran

Next Story
கதிர் தொகுப்பு
Trending News