Kathir News
Begin typing your search above and press return to search.

செந்தில் பாலாஜி மீதான அடுத்த - ஐகோர்ட்டில் விரைவில் அதிரடி விசாரணை

செந்தில் பாலாஜி மீதான அடுத்த - ஐகோர்ட்டில் விரைவில் அதிரடி விசாரணை

KarthigaBy : Karthiga

  |  20 Jun 2023 5:15 AM GMT

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என கடந்த 16- ஆம் தேதி தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டது. இந்த நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில் தேசிய மக்கள் கட்சியின் தலைவர் வக்கீல் எம்.எல் ரவி பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


அமைச்சர் ஒருவரை நியமிப்பது கவர்னரின் தனிப்பட்ட அதிகாரம். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கோர்ட்டு காவலில் உள்ள செந்தில் பாலாஜியை லாகா இல்லாத அமைச்சராக தொடர கவர்னர் அனுமதிக்காதது சரியானது. ஜாமீன் கேட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியால் அமைச்சரவை கூட்டங்களில் கலந்து கொள்ள முடியாது. எனவே இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது சட்டவிரோதமானது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News