Kathir News
Begin typing your search above and press return to search.

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் வகுப்பினரின் சாதிச்சான்றிதழ் செல்லாது - வெளியான அதிரடி அறிவிப்பு

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் சாதிச்சான்றிதழ் செல்லாது என தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் வகுப்பினரின் சாதிச்சான்றிதழ் செல்லாது - வெளியான அதிரடி அறிவிப்பு
X

KarthigaBy : Karthiga

  |  6 Sept 2022 12:15 PM IST

ஆதி திராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத் தலைவர் அருண் ஹல்தார் கூறினார் .இதுகுறித்து தேசிய ஆதிதிராவிடர் துணைத் தலைவர் அருண் ஹல்தார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


தேசிய ஆதிதிராவிடர் கமிஷனுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில் 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகின்றது. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது .ஆதிதிராவிட மக்களின் மீது நிகழும் நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்திலும் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.


தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரை அடுத்து சம்பந்தபட்ட கிராமத்திற்குச் சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.


ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மதம் மாறும் போது தானாக ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறுகின்றனர் மதம் மாறிய பயணம் அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் போலி சான்றிதழ்.


இது குறித்து பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது சரிபார்த்து வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News