3 குழந்தைகளை கற்பழித்த காமவெறி கத்தோலிக்க பாதிரியார்!!
3 குழந்தைகளை கற்பழித்த காமவெறி கத்தோலிக்க பாதிரியார்!!
By : Kathir Webdesk
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் சென்டமங்கலம் என்ற இடத்தில், சிரோ மலபார் என்ற ரோமன் கத்தோலிக்க பிரிவின் கீழ் இயங்கும் ஹோலி கிராஸ் சர்ச் உள்ளது. இங்கு 68 வயதுடைய ஜார்ஜ் படயட்டில் என்பவன் பாதிரியாராக உள்ளான். மேலும் அந்த சர்ச் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொடக்க பள்ளியின் மேலாளராகவும் அவன் இருந்துள்ளான். .
அந்த பகுதியில் உள்ள 3 சிறுமிகள் பிரார்தனைக்காக அந்த சர்ச்சுக்கு வருவது வழக்கம். அவர்கள் 3 பேரும் 9 வயதுடையவர்கள். அந்த 3 சிறுமிகளையும் ஆசை வார்த்தைகூறி தனது பங்களாவுக்கு அழைத்து சென்றுள்ளான். பின்னர் அவர்களை கற்பழித்துள்ளான்.
இதுபோல பலமுறை அந்த பிஞ்சு மலர்களை காமுகன் ஜார்ஜ் படயட்டில் கற்பழித்துள்ளான்.
இதில் ஒரு சிறுமி, காம பாதிரியார் ஜார்ஜ் படயட்டிலின் லீலைகளை அந்த குழந்தைகள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசியையிடம் தெரிவித்துள்ளாள். இதை கேட்டதும் தலைமை ஆசிரியை அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அவர், இது குறித்து அந்த குழந்தைகளின் பெற்றோருக்கும், குழந்தைகள் நலத்துறைக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 3 குழந்தைகளையும் காம கொடூரன் பாதிரியார் ஜார்ஜ் படயட்டில் கற்பழித்தது உறுதியானது.
குட்டு வெளிப்பட்டதும், ஜார்ஜ் படயட்டில் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டான்.
போலீசார் காம பாதிரியார் ஜார்ஜ் படயட்டில் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவனை தேடி வருகின்றனர்.
அவனை பிடித்து விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால், இதுபோன்று இன்னும் எத்தனை குழந்தைகளை சீரழித்துள்ளான் என்பது வெளிச்சத்துக்கு வரும்.