Kathir News
Begin typing your search above and press return to search.

இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ வழக்கு நிறுவனர் வீட்டில் அதிரடி சோதனை!

டெல்லி போலீசாரைத் தொடர்ந்து இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ வழக்கு தொடர்ந்துள்ளது. நிறுவனர் வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளது.

இணையதள செய்தி நிறுவனம் மீது சி.பி.ஐ வழக்கு நிறுவனர் வீட்டில் அதிரடி சோதனை!

KarthigaBy : Karthiga

  |  12 Oct 2023 4:45 AM GMT

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் 'நியூஸ்க்ளிக்' இணையதள செய்தி நிறுவனம் இந்திய இறையாண்மைக்கு எதிராக சீனாவிடம் இருந்து அதிக அளவிலான நிதி பெற்றதாக கூறி டெல்லி போலீஸ் சமீபத்தில் வழக்கு பதிவு செய்தனர். 'உபா' சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் செய்தி நிறுவனத்தின் நிறுவனர் பிரபிர்புர்கயஸ்தி மற்றும் மனிதவள மேம்பாட்டு அதிகாரி அமீர் சக்கரவர்த்தி ஆகியோர் கடந்த மூன்றாம் தேதி கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் உள்ள 'நியூஸ்கிளிக்' நிறுவனமும் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் 'நியூஸ்கிளிக்' நிறுவனம் மீது வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் கீழ் சி.பி.ஐ அதிகாரிகளும் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக பிரபிர் புர்கயஸ்தாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News