சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் விபத்தின் சி.சி.டி.வி காட்சி!!
சுபஸ்ரீ உயிரை பறித்த பேனர் விபத்தின் சி.சி.டி.வி காட்சி!!
By : Kathir Webdesk
குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ. பெருங்குடி கந்தன்சாவடியில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை 3 மணியளவில் வேலை முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பினார். குரோம்பேட்டை- ரேடியர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக சுபஸ்ரீ வந்தபோது சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஒன்று திடீர் என்று சரிந்து அவர் மீது விழுந்தது.
நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியுடன் நடு ரோட்டில் விழுந்தார். அப்போது தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியது. அவர் அதே இடத்தில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
நடுரோட்டில் விழுந்த பேனர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுபஸ்ரீயின் உயிருக்கு எமனாக மாறியது. இதை கண்டவர்கள் பதறி துடித்தனர்.
சுபஸ்ரீ பலியான விபத்து தொடர்பான சி.சி.டி.வி வீடியோ காட்சி வெளியாக உள்ளது.