Kathir News
Begin typing your search above and press return to search.

நாசிக் அருகே 300 அடி ஆழ ஆழ்துளை குழாயில் விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு !! பேரிடர் மீட்புக் குழுவினர் போராடி மீட்டனர்

X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  15 Nov 2019 5:40 AM GMT

மகாராஷ்டரா மாநிலம் நாசிக்கில் 300 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் பல மணி நேரம் போராடி மீட்டனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சிறுவனின் உடல் நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் நாட்டையே உலுக்கும் அளவுக்கு மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தையடுத்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆயினும் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு விட்டதால் நாசிக் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்.

சுஜித்தை மீட்பதற்கும் தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் 3 நாட்களாக போராடியும் மீட்க முடியவில்லை, மழை மற்றும் ஈர மண் பதம், ஆழ்துளை கிணற்றின் குறுகிய விட்டம், சிறுவனின் வயது போன்ற பல காரணங்களால் துரதிஷ்டவசமாக மீட்க முடியவில்லை என கூறினர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News