இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
By : Karthiga
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல் மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பணி என்ற தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் வகையில் 10,371.92 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் விரிவான தேசிய அளவிலான இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கத்திற்கு மிஷனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் பொது மற்றும் தனியார் துறைகளில் உத்தி சார்ந்த திட்டங்கள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் ஒரு விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும். கணினி அணுகலை பரவலாக்குவதன் மூலமும் தரவு தரத்தை மேம்படுத்துவதன் மூலமும், உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு திறன்களை வளர்ப்பதன் மூலமும் , சமூக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு திட்டங்களை உறுதி செய்வதன் மூலமும், நெறிமுறை செயற்கை நுண்ணறிவை ஊக்குவிப்பதன் மூலமும் இது இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பின் பொறுப்பான உள்ளடக்கிய வளர்ச்சியை இயக்கும்.
SOURCE :Kaalaimani.com