Kathir News
Begin typing your search above and press return to search.

HNLC தீவிரவாத அமைப்பை தடை செய்தது மத்திய அரசாங்கம்!

HNLC தீவிரவாத அமைப்பை தடை செய்தது மத்திய அரசாங்கம்!

HNLC தீவிரவாத அமைப்பை தடை செய்தது மத்திய அரசாங்கம்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Nov 2019 4:09 PM IST


“ஹைனெட்ரெப் தேசிய விடுதலை கழகம் “ என்ற பெயர் கொண்ட மேகாலயா
மாநிலத்தின் தீவிரவாத அமைப்பை மத்திய அரசு தடை செய்தது. சட்ட விரோத
செயல்கள் தடுப்பு சட்டம் பிரிவு 1, துணை பிரிவு 3 ஐ பயன்படுத்தி இந்த
இயக்கத்தை மத்திய அரசு தடை செய்துள்ளது.
மேகாலயா மாநிலம் அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது, மணிப்பூர்
பகுதியில் இருக்கும் பழங்குடிகளின் தனித்துவ கலாச்சாரத்தை
அடையாளப்படுத்தும் விதமாக மேகாலயா மாநிலம் பிரிக்க பட்டது. இந்த
பகுதியில் அதிகமாக இருக்கும் “கரோ” “ஜைந்தியாஸ்” மற்றும் “காசி” பழங்குடிகள்
அவ்வப்போது அரசு பாதுகாப்பு படைகளுடன் மோதுவதும், வேலை இன்மை
மற்றும் மற்ற இனத்தவர்களுடன் வியாபார தொழில் விஷயத்தில் போட்டி இட
முடியாத சூழ்நியலால், அரசு படைகளுடன் அவ்வப்போது ஏற்படும்
மோதல்களாலும் தங்களுக்கென்று ஒரு குழுவை அமைத்து அரசுக்கு எதிராக
இயங்க ஆரம்பித்தனர்.



ஆரம்ப நாட்களில் இந்த மூன்று இன குழுக்களும் இணைந்து “ஹைனெட்ரெப்
ஆசிக் விடுதலை அமைப்பு “என்ற குழுவை உருவாக்கி இயங்கியது. பின்னாளில்
“காரோ” பழங்குடியினர் மட்டும் தனியாக பிரிந்து “ஆசிக் மட்க்ரிக் விடுதலை
அமைப்பை “உருவாக்கினார். மற்ற இரண்டு இனகுழுக்களாக “ஜைந்தியாஸ்”
மாற்றி “காசி” இனத்தவர்கள் சேர்ந்து தற்போது உள்ள ஹைனெட்ரெப் தேசிய
விடுதலை கழகம் என்ற அமைப்பை 1993 இல் உருவாக்கி வளர்ந்து வருகின்றனர்.
இவர்கள் மேகாலயாவில் தலைநகரமாக ஷில்லாங்கிழும், காசி மலைகளிலும்
இயங்கி வருகின்றனர் அனால் இவர்கள் தலைமையகம் பங்களாதேஷின் டாக்கா
நகரத்தில் உள்ளது. அங்குள்ள சிட்டாகோங் மையல் தொடரில் இவர்கள்
அதிகப்படியாக இருக்கின்றனர்.


இந்திய உளவு துரையின் தகவலின் படி இவர்கள் பாகிஸ்தானின் உளவு
அமைப்பண இசை உடன் இணைந்து செயல்படுகின்றனர், கடத்தல், கொலை,
சட்டவிரோத பண பரிவர்த்தனை போன்றவற்றில் இந்த இயக்கம் ஈடுபட்டு
வருகிறது.
இந்த அமைப்பிற்கு வாட கிழக்கு மாநிலத்தில் உள்ள இது போன்ற மற்ற தீவிரவாத
அமைப்புகள் பொருளாதார உதவிகள் புரிகின்றன. இந்த அமைப்பிற்கு வாட
கிழக்கு மாநிலத்தில் மட்டுமல்லாது பங்களாதேஷில் பல தொழில்கள்
இருக்கின்றன. இவ்ரகள் ஆயுத தலைவளங்கள் சீனாவிலிருந்து வடகிழக்கு
மாநிலங்கள் வழியாக வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News