மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்: நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு - விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
By : Karthiga
மத்திய அரசு மக்களின் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் ஏராளம். இளைஞர்கள், ஏழைகள், குடும்பத் தலைவிகள், அரசு ஊழியர்கள் , கூலித் தொழிலாளர்கள் என ஒவ்வொரு தரப்பினரையும் சிந்தித்து அதற்கு ஏற்றவாறு பலன் தரும் திட்டங்களையும் முன்னேற்ற பாதையையும் வகுத்து இந்தியாவை வெற்றிப் பாதையில் வழி நடத்தி வருகிறது. பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் செயல் திட்டங்களால் பலனடைந்தோர் ஏராளம்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். 2024 ஆம் ஆண்டு தொடங்கி அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முறை 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் அப்படி வழங்கப்பட்டால் மொத்த அகவிலைப்படி 50 சதவீதத்தை எட்டும்.
மேலும் டிசம்பர் மாதம் அனைத்து இந்திய நுகர்வோர் விலை குறியீடு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி அகவிலைப்படி உயர்வுக்கு பின் அடிப்படை ஊதியத்தில் 5.26 சதவீதம் கருணை தொகை வழங்கப்படும் . மேலும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்துவது அரசு ஊழியர்களுக்கு அகவிலை படியும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
SOURCE :Maduraimani