அரசு பள்ளிகளின் சேவைகளில் அதிரடி காட்டும் மத்திய அரசு: புதிய வகுப்பறைகள் கட்ட ரூபாய் 85.24 கோடி
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூபாய் 85.24 கோடி நிதி ஒதுக்கி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

By : Karthiga
நாட்டில் உள்ள பல அரசு பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது பற்றி கல்வி அமைச்சகம் பரிசீலிக்கிறதா? அப்படியானால் மாநில வாரியாக ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்கள் என்ன என்பது குறித்த மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் கே. ஆர்.என் ராஜேஷ்குமார் மாநில அளவில் கேள்வி எழுப்பு இருந்தார்.
இதற்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி நேற்று எழுத்து பூர்வமாக பதிலளித்தார். அந்த பதிலில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசு பள்ளிகளில் முன்மொழிவுகளின் அடிப்படையில் வகுப்பறைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் சமக்கரா சிக்ஷா திட்டம் 2018 - 2019 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன்படி 2023 - 24 ஆம் ஆண்டில் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளுக்கு ரூபாய் 18 கோடியே 19 லட்சமும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 67 கோடியே 5 லட்சமும் என மொத்தம் ரூபாய் 85 கோடியே 24 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
SOURCE :DAILY THANTHI
