Kathir News
Begin typing your search above and press return to search.

அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - மாநிலங்களை உஷார்படுத்துகிறது மத்திய அரசு

அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் நிலையில் வெப்பநோய்கள் தொடர்பாக மாநிலங்களை மத்திய அரசு உஷார் படுத்தி உள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் - மாநிலங்களை உஷார்படுத்துகிறது மத்திய அரசு

KarthigaBy : Karthiga

  |  1 March 2023 6:45 AM GMT

கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே இப்போதே நாட்டின் பல்வேறு இடங்களில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் வெப்ப நோய்கள் தாக்க தொடங்கும் நிலை உள்ளது . குறிப்பாக வெப்ப தளர்ச்சி, மயக்கம், சிறுநீர் கடுப்பு, வயிற்றுப்போக்கு, அம்மை நோய் போன்ற நோய்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று. இப்படிப்பட்ட வெப்பநிலை தொடர்பாக மாநிலங்களை உஷார்படுத்தும் விதத்தில் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


அந்த கடிதத்தில் வெப்பத்தினால் ஏற்படுகிற தாக்கத்தை எதிர்கொள்வதற்கு வெப்பநிலைகளால் தாக்கப்பட்டு வருவோருக்கு சிகிச்சை அளிக்க சுகாதார மையங்களும் ஆஸ்பத்திரிகளும் தயாராகவதற்கு ஏற்ற விதத்தில் அனைத்து மாவட்டங்களும் தயார் நிலையில் இருக்குமாறு மாநிலங்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது .


மேலும் வெப்ப நோய்கள், மரணங்கள் தொடர்பாக தரவுகளை அவ்வப்போது புதுப்பிப்பது உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன . கடிதத்தில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் என்.பி.சி. சி எச்.எச்.என்னும் காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய தேசிய திட்டத்தின் கீழ் மார்ச் 1ஆம் தேதி முதல் தினம் தோறும் வெப்பநோய்கள் பற்றி கண்காணிக்கப்படும். வெப்ப நோய்க்கான மருந்துகள் குளுக்கோஸ், திரவங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் போதுமான அளவில் வைத்துக்கொண்டு சுகாதாரத் தயார் நிலையில் அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இருக்க வேண்டும். எல்லா சுகாதார நிலையங்கள் ஆஸ்பத்திரிகளிலும் போதுமான அளவு குடிநீர் இருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.


நாட்டின் பல இடங்களில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை இப்போதே அதிகரித்துள்ளது. வெப்ப அலையில் பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான முன் எச்சரிக்கைகள் தொடர்பாக காலநிலை மாற்றம் மற்றும் மனித ஆரோக்கியம் பற்றிய தேசிய திட்டத்தின் கீழ் உருவாக்கப்படுகிற விழிப்புணர்வு பிரசுரங்களை மாநிலங்கள் பயன்படுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News