Kathir News
Begin typing your search above and press return to search.

விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பரான ஓய்வூதிய திட்டம்- ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு தொகையா?

விவசாயிகளின் முதிர்வு காலத்தில் பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஓய்வூதிய திட்டம் குறித்தான தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பரான ஓய்வூதிய திட்டம்- ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு தொகையா?
X

KarthigaBy : Karthiga

  |  4 Dec 2023 10:45 AM IST

விவசாயிகளின் முதிர்வு காலத்தில் பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஓய்வூதிய திட்டம் குறித்தான தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


மத்திய அரசு விவசாயிகளின் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முதிர்வு காலத்தை எட்டிய பிறகு கடின உடல் உழைப்புடன் கூடிய விவசாயப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். அந்த சமயத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகள் மாதம் தோறும் ரூபாய் 3000 வீதம் ஆண்டுக்கு ரூபாய் 36,000 ஓய்வூதிய தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.


இதற்காக 18 முதல் 40 வரை உள்ள விவசாயிகள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். 18 வயது உடையவர்கள் மாதம் தோறும் ரூபாய் 55 ம், 30 வயது உடையவர்கள் ரூபாய் 110 ம் , 40 வயது உடையவர்கள் ரூபாய் 200 மாதம் தோறும் செலுத்தி வரவேண்டும். இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகள் மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று இது தொடர்பான விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் வங்கி கணக்கு இணைத்து மாதம் தோறும் ஓய்வூதிய திட்டத்திற்கான தொகையை செலுத்திக் கொள்ள முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News