Kathir News
Begin typing your search above and press return to search.

பழங்குடியினர் நலனுக்காக அசத்திய மத்திய அரசு - 24 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்!

பழங்குடியினர் நலனுக்காக ரூபாய் 24 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

பழங்குடியினர் நலனுக்காக அசத்திய மத்திய அரசு - 24 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்!

KarthigaBy : Karthiga

  |  15 Nov 2023 8:30 AM GMT

மத்திய பிரதேச சட்டசபை 17-ம் தேதி நடக்கிறது . இதையொட்டி நேற்று மத்திய பிரதேசத்தின் பேடுல் மாவட்டத்தில் நடந்த பா. ஜனதா தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார் . அங்கு அவர் பேசியதாவது:-


மத்திய பிரதேச சட்டசபை தேர்தலுக்கு இதுதான் எனது கடைசி பொதுக்கூட்டம். இதற்கு இவ்வளவு பேர் கூட்டமாக திரண்டு வந்திருப்பதை பார்க்கும்போது பாஜனதா வெற்றி உறுதி என்று தெரிகிறது. எப்போதும் இல்லாத வகையில் மக்களிடையே நம்பிக்கையும் பாசமும் காணப்படுகிறது. அதனால் காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஏற்கனவே ஒப்புக்கொண்டுவிட்டது. தற்போது காங்கிரஸ் பிரமுகர்கள் தங்கள் வெற்றி வாய்ப்பை அறிய ஜோதிடர்களை சந்தித்து வருகிறார்கள்.


அவர்கள் அதிர்ஷ்டத்தை நம்புகிறார்கள். மோடியின் உத்தரவாதத்துக்கு முன்பு தங்களது பொய் வாக்குறுதிகள் நிற்காது என்று அவர்களுக்கு புரிந்து விட்டது. 15ஆம் தேதி பழங்குடியினர் கௌரவ தினம் கொண்டாடப்படுகிறது. அதற்காக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவுக்கு மரியாதை செலுத்துவேன். இந்தியாவில் ஒவ்வொருவரும் சீன செல்ஃபோன்களை வைத்திருப்பதாக காங்கிரஸின் மகாஞானி ஒருவர் பேசியதாக கேள்விப்பட்டேன்.


நாட்டு நிலவரத்தை பார்க்க முடியாதபடி எந்த வெளிநாட்டு கண்ணாடியை அவர் அணிந்திருக்கிறார் என்று தெரியவில்லை. முட்டாள்களின் தலைவன் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நாட்டின் சாதனைகளை கவனிக்க முடியாதபடி காங்கிரஸ் தலைவர்கள் மனநல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன செல்போன் தயாரிப்பில் உலகத்திலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரூபாய் 20 ஆயிரம் கோடிக்கும் குறைவான மதிப்படைய செல்போன்தான் தயாரிக்கப்பட்டன.


ஆனால் தற்போது மூன்று லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு லட்சம் கோடி மதிப்புள்ள செல்போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்பு பொருள்கள் தான் சந்தைக்கு வந்தன. அதை வர்த்தகர்கள் பாராட்டினர். தேர்தல் நேரத்தில் மட்டும் இந்தியா தயாரிப்பு பற்றி நினைப்பவர்களுக்கு சுதேசியின் முக்கியத்துவம் புரியாது. 370- வது பிரிவு நீக்கம் , முத்தலாக் தடைச் சட்டம் , ராமர் கோவில் கட்டுமானம் ஆகியவை எப்போதும் நடக்காது என்று காங்கிரஸ் நினைத்திருந்தது.


ஆனால் அவற்றை நனவாக்கியுள்ளோம். அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இது எனது உத்தரவாதம். காங்கிரஸ் ஊழலுக்கும், கொள்கைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இது அமையும். காங்கிரஸ் எங்கு சென்றாலும் அழிவைத்தான் கொடுக்கும் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News