Kathir News
Begin typing your search above and press return to search.

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

KarthigaBy : Karthiga

  |  10 Sep 2022 9:45 AM GMT

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை கோர்ட் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்கவும் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது .ஆன்லைன் ரம்மி ,போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. முந்தைய அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்யக்ககோரி ஜங்கிலி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை வழக்குகள் தொடரப்பட்டன .


அந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2021 ,ஆகஸ்ட் 3ஆம் தேதி கூறிய தீர்ப்பில் ,தமிழக அரசு கொண்டுவந்த சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது எனவும் போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்தது .மேலும் உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டு களுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தமிழக அரசின் சார்பில் மூத்தவக்கில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.


அப்போது நீதிபதிகள் இதே விவகாரம் தொடர்புடைய மனுக்கள் ஏதாவது நிலுவையில் உள்ளனவா என கேட்டனர். கர்நாடக அரசு தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதாக மூத்த வக்கீல் கபில் சிபில் குறிப்பிட்டார் .வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசின் மேல்முறையீடு மனு தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்க ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News