Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே பெண் பிள்ளைக்கான மத்திய அரசின் அருமையான திட்டம் - சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம்!

ஒரே பெண்பிள்ளை வளர்கிற வீட்டில் அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்திற்காக மத்திய அரசு அருமையான திட்டத்தை நடைமுறைப்படுத்தி இருக்கிறது.

ஒரே பெண் பிள்ளைக்கான மத்திய அரசின் அருமையான திட்டம் - சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் திட்டம்!
X

KarthigaBy : Karthiga

  |  30 April 2024 8:57 AM GMT

ஒரே ஒரு பெண் பிள்ளை இருக்கின்ற வீட்டில் அவருடைய படிப்பிற்கு உதவும் வகையில் மத்திய அரசின் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே ஃபெல்லோஷிப் என்கின்ற திட்டம் பல நன்மைகளை வழங்குகின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு அந்த பெண்ணுக்கு இச்சலுகைகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதற்கு எப்படி விண்ணப்பிப்பது? மற்றும் அது குறித்த பிற விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

இந்த திட்டத்தை பொறுத்தவரை வீட்டிலிருந்து குரு மகள் மட்டுமே இதில் பயனடைய முடியும். ஆண் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தில் சேர வாய்ப்புகள் இல்லை. அதேபோல ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருடைய மேல்படிப்பை அந்த பெண் மேற்கொள்ளும் பொழுது மத்திய அரசு அவருக்கான சலுகைகளை மதிப்புள்ள முத்திரைத்தாளை உறுதிமொழி பத்திரமாக பெற்றோர்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அந்த உறுதிமொழியானது மாஜிஸ்திரேட் அல்லது தாசில்தார் வகுப்பு அரசு ஊழியர்களால் சான்று அளிக்கப்பட வேண்டும்.

அதேபோல அந்த பெண்ணின் பெயரில் ஆதார், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் சேரும் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோக்களுக்கு (Junior Research Fellow) இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் 31 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அதுவே சீனியர் ஆராய்ச்சி ஃபெல்லோவாக இருப்பின் தலா 35 ஆயிரம் வழங்குகிறது மத்திய அரசு.

மாற்று திறனாளிகளுக்கும் மாதம் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தகுது. இந்த திட்டத்தில் சேர தகுதியுடைய பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி அல்லது நிறுவனத்தில் PhD, அதுவும் முழு நேரமாக பயில வேண்டும். பகுதி நேரமோ அல்லது தொலைதூர PhD சேர்க்கைக்கு இந்த திட்டம் பொருந்தாது.

மேலும் அந்த பெண்ணின் வயது 40திற்குள்ளாக இருக்க வேண்டும் எஸ்சி/எஸ் டி/ஓ பி சி மற்றும் PWD வகுப்பினர்களுக்கு 45 வயது வரை தளர்வு அளிக்கப்படும். NACC சான்றிதழ் பெற்ற மத்திய மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பிஎச்டி செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


SOURCE :News18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News