Kathir News
Begin typing your search above and press return to search.

பெண்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் மத்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் : மார்ச் 31 - 2025 வரை செல்லுபடி

ஒரு ஆண்டிற்கு 7.5% வட்டி விகிதத்தில் இரட்டிப்பு லாபம் தரக்கூடிய அஞ்சல் துறையின் அருமையான சேமிப்பு திட்டம் எது தெரியுமா? இது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் மத்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் : மார்ச் 31 - 2025 வரை செல்லுபடி

KarthigaBy : Karthiga

  |  30 July 2023 5:30 PM GMT

பெண்களின் எதிர்கால செலவுக்காக சேமிக்கும் வகையில் அஞ்சலகங்களில் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் பெண்களுக்கு இரட்டிப்பு லாபம் பெரும் வகையிலானா மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் செல்லுபடியாகும்.


இந்தத் திட்டத்தில் குறைந்தது ரூ.1000 முதல் அதிகபட்சமாக 2 லட்சம் வரையிலும் 100ன் மடங்குகளில் டெபாசிட் செய்யலாம். 2025 ஆம் ஆண்டில் இந்த கணக்கு முதிர்ச்சி அடைந்த பின்னர் 7.5 சதவீதம் வட்டி விகிதத்தில் டெபாசிட் செய்த தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும். மேலும், இந்த கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டாலோ அல்லது நோய் உள்ளிட்டகாரணங்களால் பாதிக்கப்பட்டிருந்தால் கணக்கு முதிர்வு அடைவதற்கு முன்பாகவே பணம் வழங்கப்படும்.


SOURCE :EXAMSDAILY.COM

Next Story
கதிர் தொகுப்பு
Trending News