டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட பகீர் தகவல்!
டெல்லி கலவரத்திற்கு காரணம் யார்? பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட பகீர் தகவல்!

டெல்லியில் முஸ்லிம்கள் நடத்திய கலவரத்தில் 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 200-க்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கலவரம் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
டெல்லியில் நடந்த கலவரத்திற்கு காரணம் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தான். தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தூண்டி விட்டனர். இன்னமும் அவர்கள் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநகராட்சி கவுன்சிலர் தாகிர் உசேன், தனது வீட்டை கலவர தொழிற்சாலையாக அமைத்து உள்ளார். அது தொடர்பான வீடியோக்கள் கிடைத்து உள்ளன. கலவரத்திற்கு அவரது வீட்டில் துப்பாக்கிகள், ரசாயனங்கள், ஆசிட்டுகள், பெட்ரோல் குண்டுகள், கற்கள் போன்றவற்றை அவர் பதுக்கி வைத்துள்ளார்.
ஆனால் இதுபற்றி ஆம் ஆத்மி கட்சியோ அல்லது காங்கிரஸ் கட்சியோ வாய்திறக்கவில்லை. மௌனம் சாதிக்கின்றனர்.. இவர்களின் இந்த மௌனம் கண்டனத்திற்கு உரியது.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.