Kathir News
Begin typing your search above and press return to search.

2022 ஆண்டிற்குள் இரயில்கள் கூட கார்பனை வெளியிட கூடாது - பிரதமர் மோடி அரசு மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!

2022 ஆண்டிற்குள் இரயில்கள் கூட கார்பனை வெளியிட கூடாது - பிரதமர் மோடி அரசு மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!

2022 ஆண்டிற்குள் இரயில்கள் கூட கார்பனை வெளியிட கூடாது - பிரதமர் மோடி அரசு மேற்கொள்ளும் அடுத்த அதிரடி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  23 Sept 2019 7:43 PM IST


இந்திய ரயில்வே துறையானது 19,000 பயணிகள் மற்றும் சரக்கு இரயிலில் 5,000 ரயில்களை டீசல் மூலமாக இயக்கி வருகிறது. இதற்காக வருடத்திற்கு சுமார் 18,000 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசல் பயன்படுத்தப்படுகிறது. இதில் 300 கோடி லிட்டர் டீசல் வாங்கப்பட்டு இந்திய இரயில்வே பயன்படுத்துகிறது.


2014 ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நூறு சதவிகிதம் மின்மயமாக்கல் என்ற இலக்கை நோக்கி இந்திய ரயில்துறையானது நகர்ந்து வருகிறது. 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு வருடத்திற்கு 300 கிமீ முதல் 950 கிமீ வரை மட்டுமே மின்மயமாக்கப்பட்ட ரயில் தடம், பிரதமர் மோடி ஆட்சி காலத்தில் வருடத்திற்கு 1500 கிமீ தூரம் வரை மின்மயமாக்கப்பட்டு வருகிறது.


ஆதாரம்: Central Organisation for Railway Electrification - Wikipedia


2017 மற்றும் 2018 ஆம் ஆண்டில் 4,000 கிமீ தூரம் மின்மயமாக்கப்பட்டது. மீதம் எஞ்சி இருக்கும் 22,000 கிமீ தூர இரயில்வே பாதை மின்மயமாக்கும் பணி 2021-2022 ஆண்டிற்குள் முடியும் என்று எதிரிபார்க்கப்படுகிறது


மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக ஆல்ஸ்டோம் (Alstom) என்ற நிறுவனம் பீகாரிலும், இந்தியன் இரயில்வே சித்ரஞ்சன் லோகோ வொர்க் நிறுவனத்தை மேற்கு வங்கத்திலும் தொடங்கி மின்சாரத்தில் இயங்கும் என்ஜினை உற்பத்தி செய்யும் பணியில் இறங்கியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News