Kathir News
Begin typing your search above and press return to search.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு!

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி அயோத்தியில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் களம் இறக்கப்பட்டடு பாதுகாப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத்திய ரிசர்வ் படை பாதுகாப்பு!

KarthigaBy : Karthiga

  |  14 Jan 2024 2:00 PM GMT

உத்திர பிரதேச மாநிலம் அயோக்கியர்கள் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது பிரதமர் மோடி பல மாநிலங்களின் முதல் மந்திரிகள் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது கும்பாபிஷேகத்துக்கு இன்னும் பத்து நாட்களில் உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அயோத்தியில் களமிறக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அயோத்தி மண்டல போலீஸ் ஐ.ஜி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறுகையில் 100 டி.எஸ்.பி.க்கள், 325 இன்ஸ்பெக்டர்கள், 800 சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 11 ஆயிரம் போலீசார் கும்பாபிஷேக பாதுகாப்பு பணி மேற்கொள்ள பயன்படுத்தப்படுவர். விஐபிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 3 டி.ஐ.ஜி க்கள் 17 எஸ்.பிக்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது .


சி.ஆர்.பி. எஃப் உள்ளிட்ட மத்திய பாதுகாப்பு படைகளும் கூடுதல் பாதுகாப்பு பணிக்காக களம் இறக்கப்பட்டுள்ளனர். செயற்கை நுண்ணறிவு திறன், தடுப்பு எந்திரங்கள் உள்ளிட்டவை பயன்படுத்த உள்ளோம் என்றார். மேலும் இந்திய புலனாய்வு முகமையின் உதவியையும் நாடி உள்ளதாக கூறியுள்ளார். தரை,வான் கடல் என மூன்று தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி உலகிலேயே மிக நீளமான மிதக்கும் ராட்சத திரையை உத்தர பிரதேச நிர்வாகம் நிறுவியுள்ளது. 1800 சதுர அடியிலான மிதக்கும் கப்பலில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட ஒளிரும் திரை 1100 சதுர அடியில் அமைக்கப்பட்டது. சரயு நதிக்கரையில் இந்த கப்பல் மிதக்க விடப்பட உள்ளது. இதன் மூலம் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரடியாக ஒளிபரப்ப மாநில நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


ராமர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்கு வித விதமான நன்கொடைகள் வழங்கப்பட உள்ளன. கோவிலுக்கு அடிக்கல் நாட்டிய போது தோண்டி எடுக்கப்பட்ட மண் துகள்களை உள்ளடக்கிய சிறிய குப்பி, 15 மீட்டர் அகல இராமர் படம், அலங்கரிக்கப்பட்ட பரிசு பெட்டிகளில் கோவில் பிரசாதங்களான லட்டுகள், பசுநெய் ஆகியவை வழங்கப்பட இருப்பதாக அயோத்தி ராமர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அயோத்தி கும்பாபிஷேகத்தை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திரிபுரா தலைநகர் அகர்தலாவில் ராமர் உள்ளிட்ட சாமிகளின் வேடங்களில் அணிந்து சிறுவர்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News