உலகின் அதிநவீன விமானங்களை கொண்ட விமானப்படையாக உருவெடுத்த இந்திய விமானப்படை : இரவு - பகல் வேறுபாடின்றி சுற்றி சுழற்றி அடிக்கும்!
உலகின் அதிநவீன விமானங்களை கொண்ட விமானப்படையாக உருவெடுத்த இந்திய விமானப்படை : இரவு - பகல் வேறுபாடின்றி சுற்றி சுழற்றி அடிக்கும்!

இந்தியா கேட்டிருந்த அதிநவீன ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்த அப்பாச்சி, சினூக் ரக ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்துவிட்டதாக அறிவித்துள்ளது.
- இந்த ஹெலிகாப்டர்கள் லேசர் மற்றும் Infrared தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது.
- இரவு - பகல் என எந்த நேரத்திலும், எந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும்.
- அதிநவீன ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்தவை.
கடந்த மார்ச் மாதத்தில் கடைசி 5 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த் நிலையில் தற்போது மீதமிருந்த 5 சினூக் ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையிடம் கடந்த மாதம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வைத்துள்ள 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது.
இந்திய விமானப்படையில் MI 35 என்ற ரஷ்ய ஹெலிகாப்டர்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இப்போது அமெரிக்காவின் ஏஹெச் -64 இ மற்றும் CH-47F(I) அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வந்துள்ளதால் உலகின் அதிநவீன விமானங்களை கொண்ட விமானப்படைகளில் ஒன்றாக இந்திய விமானப்படை மாறியுள்ளது.