130 கோடி இந்திய மக்களுக்கும் இன்று இரவில் நற்செய்தி! இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா படைக்கப்போகும் சரித்திரம்.!
130 கோடி இந்திய மக்களுக்கும் இன்று இரவில் நற்செய்தி! இன்னும் சில மணி நேரத்தில் இந்தியா படைக்கப்போகும் சரித்திரம்.!
By : Kathir Webdesk
சந்திரயான் - 2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை 130 கோடி மக்களும் பார்க்க காத்திருக்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்திய விண்வெளி வரலாற்றில், நடக்கும் மிகச்சிறப்பான தருணத்தை பார்க்க பெங்களூருவின் இஸ்ரோ மையத்திற்கு வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான தருணத்தை, நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும், சந்திரயான் -2 நிலவில் தரையிறங்கும் சிறப்பான தருணத்தை பார்க்கின்றனர். பூடானை சேர்ந்த இளைஞர்களும் பார்வையிடுகின்றனர்.
பெங்களூருவின் இஸ்ரோ மையத்தில் என்னுடன் இணைந்து சிறப்பான தருணத்தை பார்வையிடும் இளைஞர்கள், மைகவ் இணையம் மூலம், இஸ்ரோ நடத்திய வினாடி வினாவில் வெற்றி பெற்றனர். இதில் அதிகளவு இளைஞர்கள் பங்கேற்றனர். இதன் மூலம், விண்வெளி மற்றும் அறிவியலில் இளைஞர்கள் ஆர்வத்தை எடுத்து காட்டுகிறது. இது மிகப்பெரிய அறிகுறி.
22 ஜூலை மாதம் சந்திரயான் -2 விண்கலம் ஏவப்பட்டது முதல், அது குறித்த தகவல்களை தொடர்ச்சியாக, ஆர்வத்துடன் கேட்டு வருகிறேன். இந்த திட்டம், இந்தியாவின் திறன் மற்றும் ஆற்றலை எடுத்து காட்டுகிறது. இதன் வெற்றி கோடிக்கணக்கான மக்களுக்கு பயன்தரும்.
நிலவின் தென்பகுதியில், சந்திரயான் -2 விண்கலம் தரையிறங்கும் சிறப்பான தருணத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுங்கள். அதனை நான் ரிடுவீட் செய்கிறேன்.