Kathir News
Begin typing your search above and press return to search.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் கட்டமைப்பு: இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் கட்டமைப்பு அமைத்து இணையத்தில் பதிவு செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் கட்டமைப்பு: இணையத்தில் பதிவு செய்ய உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  18 Aug 2023 10:00 AM GMT

தேசிய இணையவழி தரவுத்தளத்தில் மின்சார வாகன பொது சார்ஜிங் குறித்த தகவல்களை சார்ஜிங் நிலையத்தை இயக்குபவர்கள் சமர்ப்பிப்பதற்கான வரைவு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் கட்டமைப்புகளுக்கான திருத்தப்பட்ட ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை மத்திய அரசின் மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநில அரசும் மின்சார வாகனங்களுக்கான பொது சார்ஜிங் கட்டமைப்புகளை அமைப்பதற்கான தனி ஒருங்கிணைப்பு முகமையை நியமிக்க வேண்டும்.


குடியிருப்பு சங்கங்கள் வணிக வளாகங்கள் அலுவலக வளாகங்கள் ஓட்டல்கள் போன்றவற்றில் பொது சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு அங்கு வர அனுமதிக்கப்பட்டவர்களின் வாகனங்களை சார்ஜ் செய்ய அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.www.evyatra.beeindia.gov.in என்ற இணையதள முகவரியில் சார்ஜிங் நிலையங்களை இயக்குபவர்கள் பதிவு செய்ய வேண்டும். வாரந்தோறும் மாநில ஒருங்கிணைப்பு முகமை மூலம் தேவையான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும். வழிமுறைகள் தேசிய எரிசக்தி துறையால் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றப்படும் என்று மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News