சென்னையை அதிர வைத்த மோடி! மோடி! கோஷம்!!
சென்னையை அதிர வைத்த மோடி! மோடி! கோஷம்!!
By : Kathir Webdesk
சென்னையில் உள்ள ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதுமட்டுமில்லாமல் ஐ.ஐ.டி துவங்கி 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதன் வைர விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி காலை சென்னை வந்தடைந்தார், பிரதமரை தமிழக முதல்வர் துணை முதலவர் ஆளுநர் அமைச்சர் பெருமக்கள், பா.ஜ.க நிர்வாகிகள் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தின் வெளியே கூடியிருந்த பா.ஜ.க தொண்டர்கள், மோடி.,மோடி என்ற கோஷத்துடன் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்றனர். மோடி மோடி என்ற கோஷம் மீனம்பாக்கத்தை அதிர வைத்தது.
பா.ஜ.க தொண்டர்களிடம் உரையாற்றிய மோடி பிரதமராக நான் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின் முதன் முறையாக சென்னைக்கு வந்துள்ளேன். பட்டமளிப்பு விழாவிற்கு வந்த என்னை திரளாக கலந்து கொண்டு வரவேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது.
அமெரிக்காவில் சென்றிருந்த போது அங்கு வசிக்கும் தமிழர்கள் எனக்கு சிறப்பாக வரவேற்பு அளித்தனர். தமிழ் மொழி மிக பழமையான மொழி என அமெரிக்காவில் பேசியது தான் அங்குள்ள ஊடகங்களில் பேசு [பொருளாகி உள்ளது . இந்தியாவை பற்றி அமெரிக்கா மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது.
நம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்.பிளஸ்டிக்கால் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை மட்டும் முற்றிலும் நிறுத்த வேண்டும்.மற்ற பிளாஸ்டிக் பொருட்களைஉபயோகப்படுத்தலாம்.
மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளில் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளோம். அப்போது அனைத்து தரப்பு மக்களிடமும் அரசின் கொள்கைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.