Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை என் மனதை வென்றது - ரோடு ஷோ முடிவில் பிரதமர் மோடி நெகழ்ச்சி!

சென்னை தி.நகரில் நேற்று பிரதமர் ரோடு ஷோ மேற்கொண்டார். ரோடு ஷோவின் முடிவில் சென்னை என் மனதை வென்றது என்று டிவீட் பதிவு செய்துள்ளார்.

சென்னை என் மனதை வென்றது - ரோடு ஷோ முடிவில் பிரதமர் மோடி நெகழ்ச்சி!
X

KarthigaBy : Karthiga

  |  10 April 2024 11:13 AM GMT

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பிறகு முதல் முறையாக நேற்று பிரதமர் மோடி சென்னை தி-நகரில் ரோடு ஷோ மேற்கொண்டார். தொடர்ந்து ரோட் ஷோ முடித்துக் கொண்ட பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் அடுக்கடுக்கான பதிவுகளை பதிவிட்டுள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை என் மனதை வென்றது. இந்த ஆற்றல்மிக்க நகரத்தில் இன்றைய ரோட் ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும் நமது தேசத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்யவும் மக்களின் ஆசைகள் எனக்கு வலுவை தருகின்றன .சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம் தமிழ்நாடு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவு அளிக்க தயாராக உள்ளது என்பதை காட்டுவதாக உள்ளது. இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்.

கடந்த சில ஆண்டுகளாக வாழ்வை எளிதாக்கும் முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் திறப்பதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன். இதன் அடிநாதமாக இருப்பது இணைப்புகள். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் ஒரு புதிய ஒருங்கிணைந்த முனையை கட்டிடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும். தமிழ் கலாச்சாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐநாவில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன். உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் கலாச்சாரத்தின் அமைப்புகளை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது .இது இந்த மாநிலத்தின் சிறப்பு மிகு கலாச்சாரத்தை கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். சாலைகள் ,துறைமுகங்கள் ,நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம் ,வர்த்தகம் இணைப்பு எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்.டி.ஏ அரசு தொடர்ந்து பணியாற்றும்.

அதே நேரத்தில் பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர் கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம் .பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு ,சிறு நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம். சென்னை கோயமுத்தூர் மற்றும் சென்னை மைசூர் இடையேயான இணைப்பு மேம்பட உதவி புரிந்த வந்தே பாரத் விரைவு வண்டிக்கு நன்றி. இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.


SOURCE :Dinaboomi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News