Kathir News
Begin typing your search above and press return to search.

2 மணிநேரத்துக்குள் ஆஜராக வேண்டும் : சிதம்பரம் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சி.பி.ஐ நோட்டீஸ் #ChidambaramMissing

2 மணிநேரத்துக்குள் ஆஜராக வேண்டும் : சிதம்பரம் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சி.பி.ஐ நோட்டீஸ் #ChidambaramMissing

2 மணிநேரத்துக்குள் ஆஜராக வேண்டும் : சிதம்பரம் வீட்டின் முன்பு ஒட்டப்பட்ட சி.பி.ஐ நோட்டீஸ் #ChidambaramMissing

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Aug 2019 7:28 PM GMT


முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரம், 2007-ஆம் ஆண்டில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து, 350 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு, அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம், அனுமதி அளித்தது.


இந்த முதலீட்டில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவ்வழக்கை, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகின்றன.


இதே போல, சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பாகவும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இவ்விரு வழக்குகளிலும், விசாரணையில் இருந்து சிதம்பரம் நழுவுவதாகவும், எனவே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் , இரு விசாரணை அமைப்புகளும் தெரிவித்தன.


இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாகவும், ஆனால், தன்னை கைது செய்யக்கூடும் என்றும் தெரிவித்து, முன் ஜாமின் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில், சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இரு வழக்குகளிலும், சிதம்பரத்தை கைது செய்ய, தடை விதித்து, 2018, ஜூலை 25ல், நீதிமன்றம் உத்தரவிட்டது.


அதைத் தொடர்ந்து, இதற்கான தடை, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வந்தது. கடந்த ஜனவரி, 25-இல், விசாரணை முடிவடைந்து, தீர்ப்பை ஒத்திவைத்து, நீதிபதி சுனில் கவுர் அறிவித்தார்.


இந்நிலையில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவன வழக்கில் சிதம்பரம் தாக்கல் செய்துள்ள முன் ஜாமின் மனு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. முன் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.


ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ப.சிதம்பரம் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டாரா என்று இணையவாசிகள் பலரும் கேள்வி எழுப்பவே #ChidambaramMissing என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. இதனை அடுத்து, அவரை இரண்டு மணி நேரத்திற்குள் ஆஜராகும் படி சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.




https://twitter.com/the_hindu/status/1163882413694414849?s=19


இந்த நோட்டீஸ் அவரது டெல்லி இல்லத்திற்கு முன்பு ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அவர் தலைமறைவாகியுள்ளாரா என்ற. கேள்வி மேலும் வலுப்பெற்றுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News