Kathir News
Begin typing your search above and press return to search.

ப.சிதம்பரத்தின் அடுத்த முறைகேடு அம்பலம்! அமலாக்கத்துறை சம்மன்!!

ப.சிதம்பரத்தின் அடுத்த முறைகேடு அம்பலம்! அமலாக்கத்துறை சம்மன்!!

ப.சிதம்பரத்தின் அடுத்த முறைகேடு அம்பலம்! அமலாக்கத்துறை சம்மன்!!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Aug 2019 7:01 PM IST



மத்தியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடந்த போது, கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது.


இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கினார். இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்தது.


இது தொடர்பாக ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். மேலும் இந்த ஜாமீனை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுபோலவே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கிலும் சிதம்பரம் மீது விசாரணை நடைபெற்றது வருகிறது.


இந்தநிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அதே காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில் விமானப்போக்குவரத்து துறையில்முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அப்போது விமான போக்குவரத்து துறை அமைச்சராக தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த பிரபுல் பட்டேல் இருந்தார்.


அந்த சமயத்தில் தனியார் விமான நிறுவனங்களுக்கு லாபகரமான வழித்தடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், இதனால் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.


இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து இடைத்தரகராக செயல்பட்ட தீபக் தல்வார் என்பவரை கைது செய்தது. பிரபுல் பட்டேலிடமும் விசாரணை நடைபெற்றது.


அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த முறைகேட்டில் ப.சிதபரத்திற்கும் தொடர்பு இருப்பது அம்பலமானது. இதனைத்தொடர்ந்து ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.


இதுதொடர்பாக ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஆஜராகுமாறு ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News