துப்புரவு பணியாளர்கள் அல்ல, இனி தூய்மை பணியாளர்கள் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
துப்புரவு பணியாளர்கள் அல்ல, இனி தூய்மை பணியாளர்கள் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும், துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப் படுவார்கள் என அறிவிப்பினை வெளியிட்டார்.
15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் மற்றும் 12525 கிராம ஊராட்சிகளில் மொத்தம் 64 ஆயிரத்து 583 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள், என்றும் துப்புரவு பணியாளர்களின் பணி மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தையும் பேணிக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையிலும் அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும், அனைத்து பணியாளர்களும் தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்கப் படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.