Kathir News
Begin typing your search above and press return to search.

கோபத்துடன் சென்னை திரும்பும் முதல்வர் - செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?

சென்னை திரும்பும் முதல்வர் உருளப்போகும் தலைகள்.

கோபத்துடன் சென்னை திரும்பும் முதல்வர் - செந்தில்பாலாஜி அமைச்சர் பதவி பறிக்கப்படுமா?
X

Mohan RajBy : Mohan Raj

  |  31 May 2023 6:30 AM GMT

9 நாள் பயணமாக வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின், முதலில் சிங்கப்பூர் சென்றார். 23 ஆம் தேதி சிங்கப்பூர் புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு பல்வேறு நிறுவனங்களில் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி தமிழகத்தில் முதலீடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்ததோடு, சென்னையில் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். பின்னர் ஜப்பான் சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு தொழில் நிறுவன அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

எந்த நிலையில் முதல்வர் ஜப்பான் பயணத்தில் இருக்கும் பொழுது தமிழகத்தில் பலப்பல பரபரப்பான விஷயங்கள் நடந்தேறின. குறிப்பாக திமுகவின் அமைச்சரவையில் முக்கிய மற்றும் பிரதான அமைச்சராக வலம் வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் கிட்டத்தட்ட 40 இடங்களில் ஆரம்பித்த வருமானவரித்துறை ரெய்டு 200 இடங்கள் வரை சென்றது. இது மட்டுமல்லாமல் ரெய்டு மட்டும் வரும் நடந்திருந்தால் இது சாதாரண செய்தியாக தான் போயிருக்கும், ஆனால் ரெய்டு வந்து அதிகாரிகளை அடித்து வந்த பெண் அதிகாரியின் கையில் உள்ள எலும்பை முறித்து அராஜகம் செய்த காரணத்தினால் திமுக அரசுக்கு வரலாற்றில் இல்லாத அளவிற்க்கு அவப்பெயரை இந்த சம்பவம் ஏற்படுத்தியது.

இது மட்டுமல்லாமல் ஒருபுறம் செந்தில் பாலாஜி இது வந்து தவறுதலாக நடந்து விட்டது எனக் கூறி விளக்கம் அளிக்கும் அளவிற்கு இந்த ரெய்டில் அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் சென்றது. அயல்நாட்டு பயணத்திலிருந்து முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த விவகாரம் கோபத்தை ஏற்படுத்தியது. இது மட்டுமல்லாமல் உதயநிதி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்கவும் அமலாக்கத்துறை உத்தரவிட்டது வேற ஏகபோகத்திற்கு முதல்வர் தரப்பை டென்ஷன் ஆகியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சென்னையில் நேற்று முன்தினம் திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் சென்னை மாநகரம் முழுவதும் நகர பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிய அந்த வீடியோ முழுவதும் இணையங்களில் பரவி மேலும் திமுக அரசின் நிர்வாகத்திற்கு அவர்பெயர் ஏற்படுத்தியது.

இப்படி அயல்நாட்டு பயணத்தில் இருக்கும் சமயம் தொடர்ந்து அவப்பெயராக ஏற்பட்டு வருவதால் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கவலைப்பட்டதாகவும் மேலும் சென்னை வந்து இது குறித்து பார்த்துக் கொள்வதாகவும் அங்கிருந்தபடி தகவல்கள் அவர் கூறியதாக தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில் அயல்நாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று முதல்வர் சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு சென்னை திரும்புகிறார்.

சென்னை திரும்பும் முதல்வர் முதற்கட்டமாக திமுகவில் உள்ள முக்கிய அமைச்சர்களை சந்தித்து பேசுகிறார் எனவும் குறிப்பாக வருமானவரித்துறை ரெய்டு நடக்கும் சமயத்தில் அராஜக, அத்துமீறல்களில் ஈடுபட்ட விவகாரம் குறித்தும் பேசுவார் என தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் ஆட்சிக்கு தொடர்ந்து அவப்பெயர் ஏற்படுத்தி வரும் செந்தில் பாலாஜிக்கு இந்த வரப்போகும் அமைச்சரவை மாற்றத்தில் கண்டிப்பாக அமைச்சர் பதவி பறிக்கப்படும் அல்லது துறை மாற்றமாவது செய்யப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது. இதுகுறித்து அரசியல் விமர்சகர்களும் கண்டிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவியை பறித்தால் தான் நல்லது என கூறி வருகிறார்கள். குறிப்பாக அரசியல் விமர்சகர்கள் பத்திரிக்கையாளர் மணி, சவுக்கு சங்கர் ஆகியோர் விரைவில் சந்திப்பாக செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்படும் என கூறும் நிலையில் தற்பொழுது முதல்வர் அயல்நாட்டு பயணத்திலிருந்து வருவது இது குறித்து அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News