Kathir News
Begin typing your search above and press return to search.

ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் 8 வயது சிறுமியின் அசாதாரண செயல்கள் !

உலகில் அதிக அளவு ஐக்யூ லெவலை பெற்றுள்ள 8 வயது சிறுமியின் அசாதாரணமான செயல்கள்.

ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் 8 வயது சிறுமியின் அசாதாரண செயல்கள் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Sep 2021 2:01 PM GMT

அதாரா பெரெஸ் என்ற சிறுமிக்கு 162 ஐக்யூ அளவு உள்ளது சமீபத்தில் தெரிய வந்தது. இது குறிப்பிடத்தக்க மேதைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் ஐக்யூமதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது ஐக்யூ 160 மட்டுமே உள்ள நிலையில் அடாராவிற்கு 162 இருப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. எனவே அதிக அளவு ஐக்யூ லெவலை பெற்றுள்ள சிறுமியாக இவர் கருதப்படுகிறார். 2019ம் ஆண்டில் யுகடன் டைம்ஸ்சில் வெளியான தகவலின்படி அதாராவுக்கு 3 வயதாக இருந்தபோது, ​​ஆஸ்பெர்கர்ஸ் நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு வளர்ச்சி கோளாறு ஆகும்.


இது ஒரு நபருக்கு சமூக தொடர்புகள், சொற்களை புரிவதை கடினமாக்கும். இதுகுறித்து பேசிய அதாராவின் தாயார் நல்லாரே சான்செஸ் இதுபற்றி கூறுகையில், "அவள் தன் நண்பர்களுடன் ஒரு சிறிய வீட்டில் விளையாடுவதை நான் பார்த்தேன். அப்போது அவள் விசித்திரமாக நடந்து கொண்டாள். இதனால் அவளை ஒரு சிறிய அறையில் தனியாக வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாரா மிகவும் ஆழ்ந்த மனச்சோர்வில் இருந்ததால் அவள் இனி பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என்று கூறியதாக தெரிவித்தார்.


எனினும் தன் மகளின் அசாதாரண புத்திசாலித்தனத்தை அறிந்திருந்த சான்செஸ், அதாராவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார், அதன்படி மனநல மருத்துவரிடம் அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அதாராவிற்கு IQ லெவல் அதிகம் இருப்பதை அடையாளம் காணப்பட்டது. மேலும் தனித்துவமான திறன்களை கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு கற்றல் சூழலில் அவள் தனது படிப்பை தொடர்ந்தார். அங்கு அதாரா தனது தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியை தனது எட்டு வயதில் முடித்தார். மேலும் தனது இரண்டு ஆன்லைன் பட்டங்களையும் முடித்துள்ளார். 'Do Not Give Up' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதனையடுத்து தற்போது ஃபோர்ப்ஸ் மெக்ஸிகோவின் 100 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் அதாரா இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அதாரா பற்றிய செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

Input & image courtesy:news18



Next Story
கதிர் தொகுப்பு
Trending News