லஷ்கர்ஏதொய்பா துணை தலைவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா பல்டி!
By : Thangavelu
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான லஷ்கர்ஏதொய்பா அமைப்பின் துணைத் தலைவர் அப்துல் ரகுமான் மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்குமாறு இந்தியா முன்வைத்திருந்த கோரிக்கைக்கு முட்டுக்கட்டையாக சீனா உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பயங்கரவாதியான அப்துல் ரகுமான் மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஐ.நாவில் ஜூலை 1ம் தேதி இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து முன்வைக்க உள்ளது. அதாவது அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ. தடைக் குழுதான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் 1267ஆவது குழு என அழைக்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்தியாவும், அமெரிக்காவும் தங்கள் உள்நாட்டுச் சட்டங்களின்படி அப்துல் ரகுமான் மாக்கியை பயங்கரவாதியாக அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாடுகளும் முன்வைத்த கோரிக்கையின்படி 1267வது குழுவில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளுக்கு தடையில்லை என்ற அனுமதியைப் பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி மாக்கியை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு தற்போது சீனா முட்டுக்கட்டை போட்டது என்ற தகவல் கசியத்தொடங்கியுள்ளது.
Source,Image Courtesy: News 7 Tamil