காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: சீனாவின் உள்நோக்கம் என்ன?
காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மலம் தீர்வு காண வேண்டும் சீனா இந்தியாவிற்கு கூறியதன் உள்நோக்கம் என்ன?
By : Bharathi Latha
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து:
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நீண்ட நாட்களாக மோதல் நீடிக்கிறது. இந்த சூழ்நிலையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்து இருக்கிறது. இந்நிலையில் காஷ்மீர் பிரச்சினை பிரச்சினையை தீர்க்க இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என்று சீனா கருத்து தெரிவித்து இருக்கிறது. தலைநகர் பீஜங்கில் நடைபெற்ற அமைச்சக செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய சீன வெளியுறவு துறை அமைச்சர், பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
சீனாவின் நிலைப்பாடு:
அப்பொழுது அதற்கு பதில் அளித்த அவர் பேசுகையில், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானதாகவும், தெளிவானதாகவும் உள்ளது. இது இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்றில் இருந்து எஞ்சியிருக்கும் பிரச்சினை. ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் தொடர்புடைய இருதரப்பு ஒப்பந்தங்களின்படி அமைதியான வழியில் சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு:
சம்பந்தப்பட்ட தரப்பினர் நிலைமையை மேலும் சிக்கலாக ஒரு தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும் மாறாக சற்றே தீர்ப்பதற்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கு பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகளில் ஈடுபட்டு தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவருடைய இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து தற்போது எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கிறது.
Input & Image courtesy: Thanthi News