Kathir News
Begin typing your search above and press return to search.

பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை கட்டுக்குள் வைக்க உத்தரவிடும் சீனா - இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பாகிஸ்தான்.!

பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை கட்டுக்குள் வைக்க உத்தரவிடும் சீனா - இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பாகிஸ்தான்.!

பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை கட்டுக்குள் வைக்க உத்தரவிடும் சீனா - இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பாகிஸ்தான்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 2:08 AM GMT

அண்டை நாடுகளுக்கு பலவிதங்களிலும் குடைச்சல் கொடுக்கும் வழக்கமுள்ள பாகிஸ்தானுக்கும் சீனாவுக்குமே ஒரு அமைப்பு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அது தான் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்க விரும்பாத பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு. சீன ஆக்கிரமிப்பு ஜிங்ஜியாங் பகுதியில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் உள்ள குவாதர் துறைமுகத்துக்கு செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தை சீனா அமைத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக விடுதலை கோரி செயல்பட்டு வந்த பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு தற்போது சீனாவுக்கும் தலைவலியாக அமைந்துள்ளது.

குவாதர் துறைமுகம் பலுசிஸ்தான் பகுதியில் இருப்பதால் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அந்த பகுதியில் சீனா செய்து வரும் முதலீட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் 62 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள சீனாவுக்கு இது முக்கியமான திட்டமாகும். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்திய கடற்படையின் ஆதிக்கம் அதிகமுள்ள மலாக்கா ஜலசந்தியின் வழியாக சீன கப்பல்கள் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக குவாதர் துறைமுகத்துக்கு வந்து அங்கிருந்து சரக்குகளை சீனாவுக்கு எடுத்து செல்லலாம்.

சீனாவுக்கு ஹைட்ரோ கார்பன்கள் மற்றும் கச்சா எண்ணெய் முக்கிய தேவையாக இருப்பதால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பிறநாட்டு ராணுவங்களின் தொல்லை இன்றி எளிதாக சென்று வர சீனா பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடம் உதவியாக இருக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால் பலுசிஸ்தானுக்கு அருகில் உள்ள சிந்து மாகாணத்தில் சீன தூதரகம் அமைப்பது, சீன பொறியாளர்களை குடியமர்த்துவது, மேலும் பல முதலீடுகள் செய்வது உள்ளிட்ட சீனாவின் திட்டங்களை பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு தவிடுபொடியாக்கியுள்ளது.

முன்னர் பாகிஸ்தானியர்களையும் பாகிஸ்தானிய பஞ்சாபிகளையும் மட்டுமே குறிவைத்து வந்த பலுசிஸ்தான் விடுதலை அமைப்பு தற்போது சீன நாட்டினரையும் சீனாவின் திட்டங்களையும் குறி வைக்கத் தொடங்கி இருக்கிறது. இந்த அமைப்பு சீனா குவாதர் துறைமுகத்தை சரக்கு போக்குவரத்துக்காகவும் ராணுவ பயன்பாட்டிற்காகவும் உபயோகிப்பதை விரும்பவில்லை. இதனால்தான் இந்த அமைப்பு சீனர்களையும் சீன திட்டங்களையும் குறிவைத்து வருகிறது என்று கூறப்படும் நிலையில் சீனா இவர்களை சமாளிக்க முடியாமல் திணறுவதாகத் தெரிகிறது.

எனவே பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவிக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்புக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்க விரும்பாத பாகிஸ்தான் சீனாவின் முதலீடுகளை இழக்கவும் விரும்பவில்லை என்பதால் பிரதமர் இம்ரான் கான் இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார். அப்படியே சீனாவின் பேச்சை பாக்கிஸ்தான் கேட்காவிட்டாலும் வழக்கம்போல தனது கடன் கொடுத்து வலையில் வீழ்த்தும் முறையை பயன்படுத்தி சீனா பாகிஸ்தானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும்.

சீன நாட்டினரையும் திட்டங்களையும் தாக்கும் பலுசிஸ்தான் விடுதலை அமைப்பின் செயல்பாடுகள் தொடர்ந்தால் அதன் கொட்டத்தை அடக்க பலுசிஸ்தான் மற்றும் சிந்து மாகாண பகுதிகளை சீனா கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுக்குள் கொண்டுவர தொடங்கிவிடும். எனவே ஒன்று பாகிஸ்தான் பலுசிஸ்தான் பிரச்சனையை சர்வதேச அளவில் கொண்டு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் அல்லது சீனா பாகிஸ்தானை தனது காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து விடும். இந்த விஷயத்தில் பலுசிஸ்தான் விடுதலை அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கும்படி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை வைக்க பாகிஸ்தானை நிர்ப்பந்திக்கும் சீனா அதற்கு தனது ராஜாங்க ரீதியான அதிகாரம் மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கிருக்கும் பலத்தை வைத்து உதவி செய்வதாகவும் உறுதி அளித்துள்ளது.


நன்றி : tfipost.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News