பலத்த அடி வாங்கி பல்லுடைந்த சீனா! இந்தியாவுடன் திடீர் சமாதானம் : இனியும் மோத விரும்பவில்லை என்று பகீரங்க அறிக்கை!
பலத்த அடி வாங்கி பல்லுடைந்த சீனா! இந்தியாவுடன் திடீர் சமாதானம் : இனியும் மோத விரும்பவில்லை என்று பகீரங்க அறிக்கை!

இந்தியாவை ஒப்பிடும்போது, சீனத் தரப்பில் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகம் என்பதாலேயே அதனை வெளியிட சீன அரசு தயங்குவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தவரையில், இந்த பயங்கர மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகின.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜா லிஜியான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
லடாக் எல்லையில் சீனாவுக்கு சொந்தமான பகுதியில் இந்திய ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதுவே இந்த மோதலுக்கு மூலக்காரணம். சீன எல்லையில் அத்துமீறுவதில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். ஒருதலைபட்சமாக இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கையால் இரு நாட்டு எல்லை விவகாரம் மேலும் பிரச்சினை ஆகிவிடும்.
இந்தியாவுடனான எல்லையில் இனியும் மோதல் ஏற்படுவதை சீனா விரும்பவில்லை.என்று கூறியுள்ளார்.