சீனாவில் பரவும் அடுத்த தொற்றுநோய்? புபோனிக் பிளேக் என்ற கறுப்பு மரணம்.! #China
சீனாவில் பரவும் அடுத்த தொற்றுநோய்? புபோனிக் பிளேக் என்ற கறுப்பு மரணம்.! #China

ஞாயிற்றுக்கிழமை, சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள பேயன் நூரில் மூன்றாம் நிலை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, இது ஒரு ஆபத்தான பாக்டீரியா நோயான புபோனிக் பிளேக் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தத் தொற்று சனிக்கிழமையன்று கண்டறியப்பட்டது. உள்ளூர் சுகாதார அதிகாரிகள் இந்த எச்சரிக்கை காலம் இந்த ஆண்டு இறுதி வரை தொடரும் என்று தெரிவித்தனர்.
நகரத்தில் புபோனிக் பிளேக் பரவ அதிக ஆபத்து இருப்பதாக பேயன் நூரில் உள்ள உள்ளூர் சுகாதார அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். தற்காப்புக்காக, அசாதாரண (abnormal) சுகாதார நிலைமைகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் மக்களை வலியுறுத்தினர். கறுப்பு மரணம் என்றும் அழைக்கப்படும் புபோனிக் பிளேக் கொறித்துண்ணிகளால் (rodents) பரவுகிறது. இதற்கு சிகிச்சையளிக்காவிட்டால் ஒரு நாளுக்குள் இந்நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொன்று விடும் அளவுக்கு வீரியமானது.
கடந்த வாரம், மேற்கு மங்கோலியாவின் கோவ்ட் மாகாணத்தில் இரண்டு பேருக்கு புபோனிக் பிளேக் தொற்று உறுதி செய்யப்பட்டதாக, அரசுக்கு சொந்தமான சின்ஹுவா செய்தி செய்தி வெளியிட்டிருந்தது. அவர்கள் மர்மோட் (இப்பகுதியில் காணப்படும் ஒரு காட்டு கொறித்துண்ணி) இறைச்சியை உட்கொண்டதாகவும், சுமார் 146 பேருடன் அதன் பிறகு தொடர்பில் வந்ததாகவும் கூறப்படுகிறது. நோயாளிகள் தனி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் ஒருவர் 27 வயது இளைஞர், மற்றவர் அவரது 17 வயது சகோதரர். கடந்த ஆண்டு, மேற்கு மங்கோலியாவின் பேயன்-உல்கியில் ஒரு தம்பதியினர் மரமோட் இறைச்சியை பச்சையாக உட்கொண்ட பின்னர் புபோனிக் பிளேக் வந்து இறந்துவிட்டனர். எனவே, சுகாதார அதிகாரிகள் இப்போது மர்மோட் இறைச்சி சாப்பிடக்கூடாது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு உலகளவில 1 கோடிக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, 5 லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரு புதிய விகாரத்தைக் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது, இது தொற்றுநோய்களின் மரபணுக்களைக் கொண்டுள்ளது.இந்த வைரஸ் பன்றிகளிடமிருந்து பரவினாலும், விஞ்ஞானிகள் இது மனிதன் மூலம் மனிதனுக்கும் பரவுவதை எளிதாக்கும் என்று அஞ்சுகிறார்கள். பன்றிக் காய்ச்சலிலிருந்து வரும் புதிய திரிபு உடனடி பிரச்சினை அல்ல, ஆனால் உலகளாவிய பரவலுக்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இதனால் நெருக்கமான கண்காணிப்பு தேவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பேராசிரியர் கின்-சோ சாங் இதைப் பற்றி "இப்போது நாம் கொரோனா வைரஸைத் தடுப்பதில் பிசியாக இருக்கிறோம். ஆனால் ஆபத்தான புதிய வைரஸ்களின் பக்கம் நம் பார்வையை நாம் இழக்கக்கூடாது. அதை நாம் புறக்கணிக்கக்கூடாது. " என்று எச்சரித்தார்