Kathir News
Begin typing your search above and press return to search.

இலங்கைத் துறைமுகத்தில் மீண்டும் சீன கப்பலா ?இந்தியா எதிர்ப்பு : இலங்கை பரிசீலனை

இலங்கையில் மீண்டும் சீன கப்பலை நிறுத்துவது குறித்து அந்த நாடு பரிசீலித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைத் துறைமுகத்தில் மீண்டும் சீன கப்பலா ?இந்தியா எதிர்ப்பு : இலங்கை பரிசீலனை

KarthigaBy : Karthiga

  |  24 Aug 2023 11:15 AM GMT

இலங்கையில் கம்பன் தோட்டா துறைமுக பணிகள் உட்பட பல்வேறு மறு சீரமைப்பு பணிகளை சீனா மேற்கொண்டு வருகிறது . இதை ஒட்டி தங்கள் கடற்படை கப்பல்களை அடிக்கடி இலங்கை துறைமுகங்களுக்கு சீன அனுப்பி வருகிறது .அந்த வகையில் சீன கடற்படை உலக கப்பல்களில் ஒன்றான 'யுவான் வாங் 5' கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால் அதை நிறுத்தி வைப்பதற்கு இலங்கையிடம் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


குறிப்பாக இந்த கப்பல் மூலம் இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளை சீனா உளவு பார்க்கக்கூடும் என இலங்கையிடம் இந்தியா கவலை தெரிவித்தது. இந்தியாவின் இந்த எதிர்ப்பை இலங்கை பரிசீலித்தது. எனினும் தாமதமாக சீனாவுக்கு அனுமதி அளித்தது. அதன்படி இலங்கையின் கம்பன் தோட்டா துறைமுகத்தில் இந்த கப்பல் நிறுத்தப்பட்டது . இந்த நிலையில் இலங்கையில் கடல் சார்ந்த ஆய்வுகளுக்கான சீனாவின் ஆய்வகப்பலான ஷியான் - 6 ஐ இலங்கையில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டுள்ளது.


இது தொடர்பாக இலங்கையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. 90.6 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் எப்போது வரும் என தெரியவில்லை. எனினும் ஒரு அக்டோபர் மாதம் இலங்கை கடற் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த வேண்டுகோளை இலங்கை பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . கொழும்பில் உள்ள சீன தூதரகம் இது தொடர்பாக கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பாளர் பிரியங்கா விக்மசிங்கே கூறியுள்ளார். இலங்கையின் இந்த முடிவு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது . சீனகப்பலால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நேரிட கூடும் என்பதால் இது குறித்து இலங்கையிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News