Kathir News
Begin typing your search above and press return to search.

அமெரிக்காவைப் போல இந்தியாவையும் குறி வைத்த சீன உளவு பலூன் - பகீர் தகவல்!

அமெரிக்காவை சீனா உளவு பார்த்தது போல இந்தியாவையும் பலூன் மூலம் உளவு பார்க்க குறி வைத்துள்ளது.

அமெரிக்காவைப் போல இந்தியாவையும் குறி வைத்த சீன உளவு பலூன் - பகீர் தகவல்!

KarthigaBy : Karthiga

  |  9 Feb 2023 7:15 AM GMT

அமெரிக்காவின் மொன்டனா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே கடந்த மூன்றாம் தேதி மர்ம பலூன் ஒன்று பறந்தது. இந்த பலூன் சீனாவினுடையது என்றும் உளவு பார்க்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்காவும் குற்றம் சாட்டியது. சீனாவும் அமெரிக்க வானில் பறந்த பலூன் எங்களுடையது தான் வானிலை ஆய்வுக்காக பறக்க விடப்பட்ட பலூன் காற்றின் வேகம் மாறுபாடுகள் காரணமாக திசை மாறி அமெரிக்காவுக்கு சென்று விட்டது என்று விளக்கம் அளித்தது. என்னிடம் அது ஏற்க மறுத்த அமெரிக்கா போர் விமான மூலம் அந்த ராட்சத உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது தொடர்ந்து சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பலூனின் சேவைகளை அமெரிக்க ராணுவம் சேகரித்து ஆய்வு செய்து வருகிறது இந்த நிலையில் இந்தியா ஜப்பான் வெளியிட்ட பல நாடுகளை குறி வைத்து சீனா உளவு பலூன்களை இயக்கியிருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறது அதில் கூறப்பட்டுள்ளதாவது:-


சீனாவின் தெற்கு கடற்கரையில் ஹைனான் மாகாணத்துக்கு வெளியே பல ஆண்டுகளாக இயங்கி வரும் கண்காணிப்பு பலூன் ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ராணுவ சொத்துக்கள் பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறது. இந்த தகவல் பல பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை அதிகாரிகளுடனான நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த பலான்கள் அனைத்தும் சீன அரசின் ஒரு அங்கமாகும். சீன ராணுவத்தின் மூலம் இந்த பலூன்கள் இயக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.


இத்தகைய செயல்கள் பிற நாடுகளின் இறையாண்மையை மீறுவதாகும். சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்காவின் ஹவாய், ஃபுளோரிடா, டெக்ஸாஸ் , குவாம் ஆகிய இடங்களில் குறைந்தது 4 பலூன்கள் காணப்பட்டிருக்கின்றன. நான்கு நிகழ்வுகளில் 3 டிரம்ப் நிர்வாகத்தின் போது நடந்தன. ஆனால் அவை சமீபத்தில் சீன கண்காணிப்பு பலூன்களாக அடையாளம் காணப்பட்டன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது . எனினும் எப்போது சீன பலூன் இந்தியாவை உளவு பார்த்தது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News