பிரபல நடிகரின் மகன் இப்பொழுது IAS அதிகாரி - குவியும் பாராட்டுக்கள்
துணை ஆட்சியாளராக நடிகர் சின்னி ஜெயந்த் மகன்

By : Mohan Raj
தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியாளராக பொறுப்பு வகிக்கிறார் நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாரிசுகளையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள், பெரும்பான்மையினர் அவ்வாறே செயல்படுத்தவும் செய்வார்கள். ஆனால் நடிகர் சின்னி ஜெயந்த் தன் மகனை இந்திய ஆட்சிப்பணிக்கு தயார்படுத்தி, வளர்த்து உருவாக்கியுள்ளார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஐ.ஏ.எஸ் தேர்வில் தேசிய அளவில் 75'வது இடத்தை பிடித்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த பொறுப்பில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பதவி வகிக்கிறார். மேலும் இவர், "பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன்" என தெரிவித்துள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன். நாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் சில நடிகர்கள் மத்தியில் தன் மகனை ஆட்சியராக்கிய சின்னி ஜெயந்த் பாராட்டுக்குறியவர்தான்.
Image Source : Pinterest
