சித்ரா பவுர்ணமி விரத முறைகள், வழிபாட்டு முறைகள் என்ன?
சித்ரா பௌர்ணமி நாளில் காலையில் சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வழிபடலாம்.
By : Bharathi Latha
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. L மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. அனைத்து மாதங்களிலும் பவுர்ணமியில் முழுநிலவு அழகாகப் பிரகாசித்தாலும் அதில் உள்ள களங்கங்கள் மிக மெலிதாகக் காணக்கிடைக்கும். ஆனால் சித்ராபவுர்ணமி அன்று நிலவு தனது கிரணங்களை பூரணமாகப் பொழிந்து. கொஞ்சம்கூட களங்கமே காணப்படாமல் காட்சி அளிக்கும் அதனால் தான் சித்ரா பவுர்ணமி சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு தமிழ்ப்புத்தாண்டில் முதன்முதலாக வரும் முழுநிலவு நாள் என்பதாலும் இதற்குச் சிறப்பு சேர்கிறது.
பண்டைத் தமிழகத்தில் சித்திர புத்திர நயினார் நோன்பு மிகப் பிரபலமான ஒன்று அன்று விரதமிருந்து கோயில் சென்று அங்கே கூட்டமாகவோ, தனியாவோ அமர்ந்து இவரது கதையைப் படிப்பார்கள். அவ்வாறு செய்தால் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களின் பலன் குறையும் உடல் நலம் சீராக இருக்கும். புண்ணியம் கூடும். வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதிகம். மேலும் இந்த சித்திரா பௌர்ணமி நோன்பிற்கு ஒரு சிறப்பு கதையும் உண்டு. பல காலங்கள் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அதில் ஒருத்தி சித்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந்ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள். நீங்கள் அனைவரும் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்றாள். உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்க ளுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வா றே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள்.அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். இன்று சித்ரா பௌர்ணமி நாளை சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் வணங்கலாம்.
Input & Image courtesy: Malaimalar