Kathir News
Begin typing your search above and press return to search.

பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட கோவில்: 879 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய போர்.!

சோழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட இந்த கோவிலால் தற்போது வரை பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட கோவில்: 879 ஆம் ஆண்டு நடந்த மிகப்பெரிய  போர்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Dec 2021 1:00 AM GMT

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ள பள்ளிப்பாடி கோவில் தான் சோழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட கோவிலாக கருதப்படுகிறது. திருப்புறம்பியம் சிவபெருமானின் இருப்பிடங்களில் ஒன்றாகும். இங்குள்ள தெய்வம் சச்சிநாதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் இந்த கோவிலில் உள்ள தெய்வத்தை பற்றி சைவப் பெருமான் திருஞானசம்பந்தர் போற்றிப் பாடியுள்ளார். வரலாற்று ஆர்வலர்கள் இக்கிராமத்திற்கு அடிக்கடி வந்து சென்றாலும், சரியான சாலை இல்லாததால் பள்ளிப்பாடி கோயிலுக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.


நிலத்தின் உரிமையாளர்கள் ஒரு பகுதியை பகிர்ந்து கொள்ள முன்வராததால், பாதையை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடைந்ததாக உள்ளூர் மக்கள் கருத்துக்களை கூறி உள்ளார்கள். மேலும் பராமரிப்பு இன்றி இருக்கும் இந்த கோவிலில் தற்போது ஏராளமான முட்புதர்கள் செடிகள் வளர்ந்து பக்தர்களுக்கு மிகவும் இடஞ்சல் கொடுக்கிறது. இக்கோயில் தற்போது பகவதி அய்யனார் கோவில் என்று அழைக்கப்படுகிறது.


மேலும் இதுபற்றி வரலாற்றாசிரியர் ராஜமாணிக்கனார் கூறுகையில், "தன் வீரத்தால் பல்லவர்களுக்கு வெற்றியை உறுதி செய்த பிருதிவிபதியின் நினைவாக திருப்புறம்பியத்தில் உள்ள பள்ளிப்படை கோயிலின் முக்கியத்துவத்தை உறுதிப் படுத்தினார். 879 ஆம் ஆண்டில், திருப்புறம்பியத்தில் நடந்த போர், பாண்டியர்களின் தோல்விக்குப் பிறகு பல்லவர்கள் தங்கள் மேலாதிக்கத்தைத் தக்கவைக்க வெற்றியைப் பயன்படுத்த முடியாமல் போனதால், சோழர்கள் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக உருவெடுத்ததை முன்னறிவித்தது. மேலும் இக்கோவிலில் பிருதிவிபதி மன்னரின் நினைவிடம் அமைந்துள்ளதாகவும் மக்கள் கருதுகிறார்கள்.

Input & Image courtesy : The hindu



Next Story
கதிர் தொகுப்பு
Trending News