சோழர் கால கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்காத அரசு- நீதிமன்றம் அதிருப்தி !
தமிழக அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
By : Shiva
வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் நிலத்தை கையகப்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் பழமையான அர்த்தநாரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அரசு பராமரிக்காமல் விட்டதால் சிதிலமடைந்த இந்த கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதியை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க தமிழக அரசு கையகப்படுத்தியது.
இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோவில் சொத்துக்களை மத ரீதியான செயல்பாடுகள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்று கூறினர். எனினும் கையகப்படுத்திய நிலத்துக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோவிலை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கோவில் நிலத்துக்கு அரசு வழங்கிய மதிப்பீடு மிகவும் குறைவாக இருப்பதாக கூறி நீதிமன்றத்தின் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே கட்டுமான பணிகளை தொடங்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தபோதும் தமிழக அரசு கட்டுமான பணிகளை தொடங்கியது. இதற்கு தடை விதித்துள்ள நீதிமன்றம் கோவில் நிலத்தை சுதந்திரமாக மதிப்பீடு செய்ய வெளிமாநில மதிப்பீட்டாளர்கள் பரிந்துரைக்க அரசு வழக்கறகஞருக்கு உத்தரவிட்டுள்ளது.
நிலத்துக்கான இழப்பீட்டை தீர்மானிக்கும் முன் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் கோவில் புனரமைப்பு மற்றும் பராமரிப்புக்காக தொகுப்பு நிதி உருவாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை சுட்டிக்காட்டி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Source: Tamil Hindu
Image Courtesy: Twitter