Kathir News
Begin typing your search above and press return to search.

கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் 'அமீர்'

சினிமா நடன இயக்குனர் அமீர் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகனாக அறிமுகமாகிறார் நடன இயக்குனர் அமீர்

KarthigaBy : Karthiga

  |  22 April 2023 4:00 AM GMT

சினிமா நடன இயக்குனர் அமீர். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.தற்போது அமீர் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.இந்த படத்தை அவரே டைரக்டர் செய்கிறார். இதில் கதாநாயகியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்த பாவனி நடிக்கிறார். பிக்பாஸ்-ல் இவர்களின் ஜோடி பொருத்தம் எல்லோராலும் பாராட்டப்பட்டது. துணிவு பணத்திலும் நடித்திருந்தனர்.தற்போது இருவரும் நாயக நாயகியாக அடுத்த கட்டத்துக்கு நகந்துள்ளனர். இதில் மன்சூர் அலிகான், காயத்ரி ஜெயராம், சுரேஷ் சக்கரவர்த்தி, சாதனா, வீ.டி.வி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


படம் குறித்த அமீர் கூறும் போது நான் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி தற்போது புதிய படத்தை இயக்கிய கதாநாயகனாகவும் நடிக்கிறேன் . இந்த படம் காதல் காமெடி படமாக தயாராகிறது. தற்கால இளைஞர்கள் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும். இந்த படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்றார். வி. பாலகிருஷ்ணன் தயாரிக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News