Kathir News
Begin typing your search above and press return to search.

ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிறிஸ்தவ மத போதகர் - சென்னையில் பரபரப்பு!

₹30,000 கொடுத்தால் தான் விடுவிக்க முடியும் என்று மத போதகர் மோகன்தாசும் அவருடன் இருந்தவர்களும் கூறினர்.

ஆள் கடத்தலில் ஈடுபட்ட கிறிஸ்தவ மத போதகர் - சென்னையில் பரபரப்பு!
X

Shiva VBy : Shiva V

  |  4 Feb 2021 6:34 PM GMT

கார் மீது உரசியதற்காக லாரி டிரைவரை மதபோதகரும் அவரது ஆட்களும் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி அருகே இயேசு கிறிஸ்து வழிபாட்டு சபை என்ற பெயரில் சர்ச் நடத்தி வரும் மோகன் தாஸ் என்பவர் தனது காரில் சென்றுள்ளார். பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அருகே சென்று கொண்டிருந்த லாரி‌ காரின் மீது லேசாக உரசியதில் சேதம் ஏற்பட்டுள்ளது.

லாரி ஓட்டுநருடன் மதபோதகர் மோகன்தாஸ் பிரச்சினை செய்த நிலையில், லாரி ஓட்டுநர் ல்ரி உரிமையாளரிடம் பேசி, காரில் ஏற்பட்ட சேதத்துக்கு ₹30,000 ரூபாய் இழப்பீடு தருவதாகக் கூறியுள்ளார். ஆனால் அதை வாங்க மறுத்த மத போதகரும் அவருடன் வந்தவர்களும், லாரி ஓட்டுநரை மாதவரத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு வந்து எவ்வளவு செலவாகும் என்று கேட்டு அந்த தொகையைக் கொடுத்தால் தான் விடுவோம் என்று கூறி ஓட்டுநரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பின்னர் ₹30,000 ரூபாய் கொடுத்தால் தான் விடுவிக்க முடியும் என்று மத போதகர் மோகன்தாசும் அவருடன் இருந்தவர்களும் கூறியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினையால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் காவல் துறையினருக்கு போன் செய்து தனது ஓட்டுநரை கடத்திச் சென்றதாக மத போதகர் மீது புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து லாரி ஓட்டுநர் மணிகண்டனை தேடிச் சென்ற காவல் துறையினர் அவரை மீட்டு மத போதகர் மோகன்தாஸ், அவரது டிரைவர் மற்றும் உடனிருந்த ஐசக், ஜீவா, அன்பு ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளனர். இவர்கள் நால்வர் மீதும் ஆட்கடத்தல் வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு செல்லும் வழியில் அங்கு கூடியிருந்த 50ற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிறகு அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News