மதமாற்றத்திற்காக ஜெபக்கூடம் - இந்து முன்னணியின் நடவடிக்கை
மதமாற்றம் அதிகமாக நடைபெறும் கொடுத்து வச்சவ கூட்டங்களுக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்.
By : Bharathi Latha
தற்பொழுது மதமாற்றங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஏழை மக்கள் மற்றும் பலவீனமான பின்புலம் கொண்ட மக்களை சுலபமாக அவர்களுடைய மனதை மூளைச்சலவை செய்து கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் வகையில் பல்வேறு ஜெபக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூலூர் அருகே நடைபெற்ற கிறிஸ்தவ சபை கூட அனுமதி அளித்ததை எதிர்த்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சூலூர் தாலுகாவில், நீலம்பூரில் புதிதாக ஜெபக்கூடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து இந்து முன்னணி இயக்கங்கள் சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சூலூர் RSS தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் இது பற்றி கூறுகையில், "ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் கிறிஸ்தவ ஜெபக்கூடங்களால், மதமாற்றம் அதிகரித்துள்ளது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், புதிதாக பல இடங்களில் ஜெபக்கூடங்களுக்கு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். விவசாய விளை நிலங்களை ஒட்டி, கல்லறை தோட்டம் அமைக்கவும் அனுமதி அளித்துள்ளனர். இதுபோன்ற செயல்களுக்கு எதிர்ப்பும் தற்பொழுது கிளம்பு பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களால் மதமாற்றம் அதிகரிக்கும். மேலும் சில கிராமங்களில் மத மோதல்கள் உருவாக வழி வகுக்கும். இந்துக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் ஏன் ஜெபக்கூடம் உங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது இந்தப் பகுதிகளுக்கு ஜெபக்கூடம் அனுமதி வழங்க கூடாது என்று அதிகாரிகளிடம் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, முருகேசன், சிதம்பரம், ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மூகாம்பிகை மணி, கார்மேகம் மற்றும் ஏராளாமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
Input & Image courtesy: Dinamalar news