Kathir News
Begin typing your search above and press return to search.

மோசடி செய்து வெளிநாட்டு நிதி பெற்ற 2 கிறிஸ்தவ அமைப்புக்களின் FCRA உரிமம் ரத்து !

மோசடி செய்து வெளிநாட்டு நிதி பெற்ற 2 கிறிஸ்தவ அமைப்புக்களின் FCRA உரிமம் ரத்து !
X

ShivaBy : Shiva

  |  18 Dec 2021 3:00 AM GMT

வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த 2 கிறிஸ்தவ தொண்டு நிறுவனத்தின் FCRA உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது.

தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 'நியூ ஹோப் பவுண்டேஷன்' என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனமும் கர்நாடகாவை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் 'ஹோலி ஸ்பிரிட் மினிஸ்டரி' என்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனமும் வெளிநாட்டிலிருந்து முறைகேடாக நிதி பெற்று வந்ததுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த Gospel For Asia (GFA) மற்றும் கனடாவை சேர்ந்த Gospel For Asia World (GFA World) ஆகிய தொண்டு நிறுவனங்களிடம் இருந்து மோசடியாக நிதி பெற்று அதை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிலீவர்ஸ் சர்ச் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் FCRA உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

GFA, GFA World இரு அமைப்புகளும் அமெரிக்கா மற்றும் கனடாவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. பிலீவர்ஸ் சர்ச் அமைப்பின் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹோலி ஸ்பிரிட் மினிஸ்டரி தொண்டு நிறுவனம் 2017-18 முதல் 2019-20க்கு இடைப்பட்ட காலத்தில் பிலீவர்ஸ் சர்ச் அமைப்பின் நிறுவனங்கள் வாயிலாக ரூ. 49 கோடி அளவில் வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளது. அதே போன்று நியூ ஹோப் பவுண்டேஷன் இதே காலகட்டத்தில் ரூ. 42 கோடிக்கும் அதிகமாக வெளிநாட்டு நிதி பெற்றிருக்கிறது.

ஹோலி ஸ்பிரிட் அமைப்புக்கு அமெரிக்காவை சேர்ந்த 'அண்ட்கண்டிஷனல் லவ்' என்ற அமைப்பில் இருந்தும் கனடாவை சேர்ந்த 'GFA World' மற்றும் GFA South Africa ஆகிய அமைப்புகளிடமிருந்து அதிகமாக நிதியை பெற்றிருக்கிறது. இதேபோல் நியூ ஹோப் அறக்கட்டளைக்கு 2017-18 மற்றும் 2019-20 க்கு இடையேயான காலகட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த In His Steps, GFA World, GFA Finland ஆகிய அமைப்புகளிடம் இருந்தும் மேலும் அமெரிக்காவை சேர்ந்த இருவேறு தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Source : TOI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News