Kathir News
Begin typing your search above and press return to search.

டிக்டாக்கிற்கு போட்டியாக மாறும் இந்திய செயலி.!

டிக்டாக்கிற்கு போட்டியாக மாறும் இந்திய செயலி.!

டிக்டாக்கிற்கு போட்டியாக மாறும் இந்திய செயலி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 8:05 AM GMT

சீன தயாரிப்புகளை புறக்கணிப்போம் என்னும் மக்களின் அழைப்புக்கு மத்தியில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியான சிங்கரி மக்களிடம் பிரபலமடைய துவங்கியுள்ளது.

இந்தியா மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைப்பாட்டின் காரணமாக மக்கள் சீன தயாரிப்புகளை புறக்கணிக்க துவங்கியுள்ள நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியான சிங்கரி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த, மொபைல் டெவலப்பர்ஸ் ஆன சுமித் கோஸ்,பிஸ்வாத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் ஆகியோர் டிக் டாக் கிற்கு மாற்றாக இந்த சிங்கரி செயலியை உருவாக்கி உள்ளனர். 4 ஸ்டார் மற்றும் 23 ஆயிரம் ரிவியூஸ் உடன் ஒரு மில்லியன் மக்கள் பதிவிறக்கம் செய்துள்ள இந்த செயலியானது, டிக் டாக் கிற்கு போட்டியாக உள்ளது.

இதன் தலைவரான சுமித் கோஸ் ,இந்த செயலியை உருவாக்க இரண்டு வருடங்கள் தேவை பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர், இந்திய பயனாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். நவம்பர் 2018 ல் இந்த செயலி வெளியிடப்பட்டாலும், தற்போது தான் இது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இந்திய பயனாளர்களிடம் இருந்து அதிக பதில்களை நாங்கள் பெறுகிறோம். சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 25 லட்சத்திற்கும் அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தான் இந்தியாவில் உருவாக்கப்பட்ட டிக்டாக் கிற்கு எதிரான ஒரே செயலி என்றார்.

தகவலின்படி சிங்கரி, குஜராத்தி, மராத்தி, கன்னடா,பஞ்சாபி, மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கிறது. வீடியோக்கள் உருவாக்குவது மட்டுமின்றி, இந்த செயலியானது, பொழுதுபோக்கு செய்திகள், காமெடி வீடியோக்கள், பாடல் வீடியோக்கள், காதல் கவிதைகள் மற்றும் தகவல் மற்றும் பொழுது போக்கு செய்திகளை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிரவும் அனுமதிக்கிறது. மக்கள் இந்த செயலியில் வெளியிடும் வீடியோக்கள் பிரபலமாவதன் அடிப்படையில் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வழி வகை செய்கிறது. முதலில் அந்த வீடியோவை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பது புள்ளிகளாக மாற்றப்பட்டு பின்னர் பணமாக மாற்றப்படுகிறது.

இணை நிறுவனர் நாயக் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்ற முயற்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்

பிரதமர் நரேந்திரமோடி உள்ளூர் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.சிங்கரி முழுவதுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியாகும். வெளிநாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வீடியோ பொழுதுபோக்கு செயலிகளுக்கு சிங்கரி சிறந்த மாற்றாக இருக்கும். சிங்கரி வெளிநாட்டு செயலிகளின் நகல் அல்ல ஆனால் இது இந்திய பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளுக்கு அனைவரும் மாற இதுவே சரியான தருணம் என்று இணை நிறுவனரான நாயக் கூறியுள்ளார்.

டிக் டாக் கிற்கு சவாலாக யூடியூப் 15 நொடி வீடியோ என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

புதன்கிழமை யூடியூப் 15 நொடி வீடியோவை பயனாளர் பதிவேற்றம் செய்யும் வகையிலான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.டிக்டாக்கில் உள்ளது போலவே, பயனாளர்கள் ரெக்கார்ட் ஆப்ஷனை டேப் மற்றும் ஹோல்ட் செய்துகொள்ளலாம். இந்த பதினைந்து நொடி வீடியோவை இணைத்து டிக் டாக் போலவே ஒரு தனி வீடியோவாக இந்த செயலி பதிவிடுகிறது. இந்தப் புதிய அறிமுகம், மொபைல்போனில் 15 நொடிக்கும் அதிகம் உள்ள வீடியோக்களை இந்த அம்சத்தை உபயோகிக்கும்போது, யூடியூபில் இருந்து பதிவேற்றம் செய்ய முடியாது என்று குறிப்பிடுகிறது. பயனாளர்கள் அதிக நேரம் கொண்ட வீடியோக்களை முதலில் ரெக்கார்ட் செய்து பின்னர் அதை தங்கள் போன் கேலரியிலிருந்து யூடியூபில் பதிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

சோனம் வங்சுக் இந்தியர்களை சீன தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்

லடாக் பகுதியிலுள்ள புதுமை வாதியும் மற்றும் கல்வி சீர்திருத்தவாதியும், 3 இடியட்ஸ் படத்தில் வரும் புங்சுக் வாங்டு கதாபாத்திரத்திற்கு பின் உள்ள தூண்டுதலுக்கு காரணமானவருமான சோனம் தன் யூடியூப் சேனலில் சக இந்தியர்களை சீன பொருட்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். சீன தயாரிப்புகளுக்கு நாம் அளிக்கும் பணமானது சீன அரசால் அவர்களது வீரர்களுக்கு ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தப்படுகிறது. நமது வீரர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு நாமே காரணமாகக் கூடாது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிருபார் பாரத்தை எடுத்துக்காட்டாக கூறியுள்ள இவர் சீன பொருட்களை நாம் புறக்கணிப்பது நமது இந்திய பொருளாதாரத்திற்கு வரமாகும் என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News