சர்வதேச யோகா தினம் இன்று காலை பிரதமர் மோடி உரை.!
சர்வதேச யோகா தினம் இன்று காலை பிரதமர் மோடி உரை.!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாறுகிறார். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா அவசியம் என்றே கூறலாம். யோகா என்பது மதம் சார்ந்த பயிற்சி அல்ல. அது, நமது முன்னோர்கள் உலகிற்கு வழங்கிய அற்புதமான கலை என்று கூட கூறலாம். யோகா பயிற்சி செய்வதால் மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி கல்வி கற்கலாம்.
இந்தியாவின் புராதன பொக்கிஷமான யோகாவை, உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. உலகம் முழுவதும் வாழும் மக்கள் பழமை வாய்ந்த யோகாசனங்களை செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காக அதற்கு ஒரு நாளை சர்வதேச தினமாக அறிவிக்க வேண்டும் என்று கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கு வேண்டுகோள் விடுத்தார். பாரத பிரதமர் மொடிஜியின் கோரிக்கையை ஏற்று ஐ.நா.சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தது.
2015-ம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாறுகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டு யோகா தினப் பயிற்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை.
தலைநகர் டெல்லியில் இருந்தபடி அவர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதோடு யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்