சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? அதிர்ச்சி தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? அதிர்ச்சி தகவல்!

நேற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் வீட்டுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து மோப்ப நாய்கள் மற்றும் வெடி குண்டு நிபுணர்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தி உள்ளனர். அந்த சோதனைக்குப் பின்னர் வீட்டில் வெடிகுண்டு இல்லை என வெடிகுண்டு நிபுணர்கள் உறுதி செய்தனர். பிறகு போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை பற்றி காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.
தற்போது அந்த மிரட்டல் விடுத்தது 15 வயது சிறுவன் என தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அந்த சிறுவன் அவருடைய அம்மாவின் செல்போனில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளான்.
இதன் பிறகு தனிப்படை காவல்துறையினர் அந்த சிறுவனை நெல்லிக்குப்பத்தில் இருக்கும் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை செய்து உள்ளனர். பின்பு விசாரணையின் முடிவில் தான் அந்த சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. மேலும், சிறுவனை எச்சரித்து, பெற்றோரிடம் கைப்படையாக எழுதி வாங்கி கொண்டு காவல்துறை சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தன.